SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஓணம் பண்டிகை: சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எப்போது?

Onam Special Trains: ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல வகையில், சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எந்தெந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Written By Umabarkavi K
Published: Aug 17, 2026, 01:58 PM IST | Updated: Aug 17, 2026, 02:15 PM IST
Join

Onam Special Trains: அண்டை மாநிலமான கேளராவின் மிக முக்கியமான திருவிழாவான ஓணம் பண்டிகை  ஆகஸ்ட் 26ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.  ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி, 10 நாட்கள் கேரளா முழுவதும்  விமர்சையாக நடைபெறுகின்றனர். இதனால், பலரும்  கேரளாவுக்கு செல்வார்கள்.  பயணிகள் கூட்ட நெரிசலின்றி செல்லும் வகையில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

கர்நாடகா - கோட்டயம் சிறப்பு ரயில்

சேலம் வழியாக கர்நாடகா - கோட்டயம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் எண் 07351, ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று காலை 6.30 மணிக்கு ஹுப்பள்ளியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.40 மணிக்கு கோட்டயத்தை சென்றடைகிறது. 

மறுமார்க்கததில்  ஆகஸ்ட் 26ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு, ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு ஹுப்பள்ளி ரயில் நிலையத்திற்கு வந்தடைகிறது. கர்நாடகா - கோட்டயம் சிறப்பு ரயில் சேலம் வழியாக செல்கிறது. 

கர்நாடகாவில பல ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுள் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏசி 2-டயர், ஏசி 3-டயர், ஸ்லீப்பர் மற்றும் பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்ட்ரல் - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் இயக்கப்படும் இந்த ரயில், செப்டம்பர் 2ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்படும். 

06119 ரயில் எண் கொண்ட இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில்  06120 ரயில் எண் கொண்ட ரயில், செப்டம்பர் 3ஆம் தேதி வரை வியாழன்கிழமைகளில இயக்கப்படும். 

கொல்லத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடைகிறது.  சென்னை - கொல்லம் சிறப்பு ரயிலானது,  ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர்  வழியாக பாலக்காடு, திருச்சூர், ஆலவா, எர்ணாகுளம், கோட்டயம், கெல்லம் என முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

 

 

சார்லபள்ளி - கோட்டயம் சிறப்பு ரயில்

தெலங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து கோட்டயத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.  ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் இந்த ரயில் இயக்கப்படுகிறது. ஆகஸ்ட் 31ஆம் தேதி சார்லபள்ளி - கோட்டயம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 

07197 எண் கொண் ரயில் ஆகஸ்ட் 16,23, 30ஆம் தேதிகளில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.25 மணிக்கு கோட்டயம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 17,24,31ஆம் தேதிகளில் கோட்டயத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12.00 மணிக்கு சார்லபள்ளி சென்டையும். 

இந்த சிறப்பு ரயில் சேலம் வழியாக சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில் நல்கொண்டா, மிரியாலகுடா, குண்டூர், தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் ஆகிய  ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள்

பெங்களூரு கண்டோன் மென்ட்டில் இருந்து கண்ணூருக்கு திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.  இந்த ரயில் ஆகஸ்ட் 20ஆம் தேதி பெங்களூருவில் இருந்து இரவு 10.30  மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.50 மணிக்கு கண்ணூருக்கு சென்றடைகிறது. 

மறுமார்க்கத்தில் கண்ணூரில் இருந்து ஆகஸ்ட் 21ஆம் தேதி மாலை 4.10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இந்த ரயில் திருப்பூர் வழியாக கண்ணூர் செல்கிறது. பெங்களூரு - கண்ணூர் சிறப்பு ரயிலானது, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய  ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES