SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

நெருங்கும் தசரா, தீபவாளி.. ஊருக்கு போறீங்களா? சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்

Southern Railway Special Trains: தீபாவளி, தசரா பண்டிகைகளில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மைசூரு - ராமேஸ்வரம், சார்லபள்ளி - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 05, 2026, 10:19 AM IST | Updated: Oct 05, 2026, 10:32 AM IST
Join

Southern Railway Special Trains:  தமிழகத்தில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்று ரயில் சேவை. தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலும் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் தற்போது பண்டிகை நாட்களில் ரயில்களில் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். இதனை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

அதன்படி,  மைசூரு - ராமேஸ்வரம், சார்லபள்ளி - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சார்லபள்ளி - செங்கோட்டை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் (07191) அக்டோபர் 2ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நவம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் என தெரிவிக்ப்பட்டுள்ளத.

இந்த ரயில் சார்லபள்ளியில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு, சேலம் ரயில் நிலையத்திற்கு பகல் 12.40 மணிக்கு சென்றடைகிறது.   மறுமார்க்கத்தில் இந்த ரயில் சேலத்தில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, செங்கோட்டைக்கு மதியம் 2 மணிக்கு சென்றடையும்.  இந்த ரயில் ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டை செல்கிறது.  மேலும், சார்லபள்ளியில் இருந்து புறப்படும் ரயில் ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சேலம் சென்றடைகிறது.

மேலும் படிக்க: விலகும் தென்மேற்கு பருவமழை.. அடுத்த 5 நாட்கள் வெளுக்கும் மழை.. டெல்டா வெதர்மேன் அலர்ட்

மைசூரு - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்

கர்நாடக மாநிலம் மைசூரல்  இருந்து சேலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் அக்டோபர் 5ஆம் தேதியான இன்று முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை திங்கள்கிழமை தோறும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே  அறிவித்துள்ளது.  இந்த ரயில்  திங்கள்கிழமை மைசூரில் இருந்து 6.35 மணிக்கு  புறப்பட், அடுத்த நாள் காலை 11 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.  மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து செவ்வாய்கிழமை காலை 3.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்றடைகிறது. 

 

 

இந்த ரயிலில் 2 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 5 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 8 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிக்ள், 1 முதல் வகுப்பு பெட்டிகள் இருக்கும்.  இந்த ரயில் மைசூரு, மண்டியா, ராமநகரம், கேஎஸ்ஆர் பெங்களூரு, ஒசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, மனாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய ரயிலல் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த இரண்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடக்கப்பட்டுள்ளது. எனவே, பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் உடனே தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தி  இருக்கிறது. 

மேலும் படிக்க: திமுகவிற்கு 1, அதிமுகவிற்கு 1.. ஸ்டாலின் - இபிஎஸ்-க்கு இருக்கும் டீல்? போட்டுடைத்த தராசு ஷ்யாம்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES