SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

விலகும் தென்மேற்கு பருவமழை.. அடுத்த 5 நாட்கள் வெளுக்கும் மழை.. டெல்டா வெதர்மேன் அலர்ட்

Tamil Nadu Weather Update: அடுத்த சில தினங்களில் தென்மேற்கு பருவமழை விலகும் என டெல்டா வெதர்மேன் தெரிவிதுள்ளார். இதனால், அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் மழை தீவிரமாக பெய்யும் என தெரிவித்துள்ளார்.

Written By Umabarkavi K
Published: Oct 05, 2026, 09:25 AM IST | Updated: Oct 05, 2026, 09:33 AM IST
Join

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மழையின் தாக்கம் குறைந்த வருகிறது. இந்த நிலையில், டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

விலகும் தென்மேற்கு பருவமழை

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "அடுத்த சில தினங்களில் விலகும் தென்மேற்கு பருவமழை. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளம் பகுதிகளிலிருந்து தென்மேற்கு பருவமழை அடுத்த 5-7 நாட்களில் விலகுவதற்கு சாதக சூழல் காணப்படுகிறது. வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் நிலையற்ற தன்மையால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் இடி,மின்னலுடன் கூடிய மாலை/இரவு மழை தீவிரமடையும். உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்கள் மழை தீவிரமடையும்.

பகலில்வெயில் அடித்தாலும், மாலை/இரவு/நள்ளிரவு இடி,மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக அடுத்த 3 நாட்களில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழையை மாலை/இரவு நேரத்தில் எதிர்ப்பார்க்காலாம்.

மேலும் படிக்க: திமுகவிற்கு 1, அதிமுகவிற்கு 1.. ஸ்டாலின் - இபிஎஸ்-க்கு இருக்கும் டீல்? போட்டுடைத்த தராசு ஷ்யாம்!

சென்னையில் மழை எப்போது?

காவிரி டெல்டா, கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்த 2-3 நாட்கள் நண்பகலில் ஆங்காங்கே இடிமழை பதிவாகும். செப்டம்பர் 8,9 தேதிகளில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த 4-5 நாட்களில் பரவலாக வெப்பச்சலன இடிமழைக்கு வாய்ப்பு. சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் நண்பகலில் ஒரிரு இடங்களில் இடிமழை வாய்ப்பு. தற்போது பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லை" என தெரிவித்துள்ளார்.

இன்று எங்கெல்லாம் கனமழை?

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயில்லாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: அடையாள அட்டை இருந்தும் தங்க மோதிரம் இல்லை.. காரைக்குடி பெண் விவகாரத்தில் அரசு விளக்கம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES