தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!
Kallakurichi TVK MLA Arul Vignesh News: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷைக் கைது செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சிறப்பு விசாரணை அதிகாரி எஸ்பி திருசிசிங், கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்ற நீதிபதி சுவாதி அழகப்பனைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில் எம்எல்ஏ வீட்டில் சிறப்பு காவல் படை போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருப்பதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
Kallakurichi TVK MLA Arul Vignesh News: கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தவெக உறுப்பினர் அருள் விக்னேஷ் வீட்டிற்குப் பாதுகாப்புப் பணிக்காகக் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் சிக்கியுள்ள அவரைக் கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தவெக MLA வீட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு
இன்று காலை முதல் அருள் விக்னேஷ் வீட்டில் சுமார் நான்கு போலீசார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, சிறப்பு காவல் படை போலீசார் உட்பட கூடுதல் காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சூழல்
கள்ளக்குறிச்சி தொகுதி தாவேக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் வீட்டில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவரது இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க - கைதாகிறாரா அருள் விக்னேஷ்? வீட்டில் தடுப்புகள் அமைப்பு.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
ஆபாச குறுஞ்செய்தி புகார் தொடர்பாக தீவிர விசாரணை
அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள புகாரை விசாரிக்கும் பொறுப்பு சிறப்பு விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை அதிகாரி திருப்பூர் எஸ்பி திருசிசிங், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் புகார் தொடர்புடைய அரசு அதிகாரிகளிடம் ஏற்கனவே விசாரணையை நடத்தி முடித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்ற நீதிபதி சுவாதி அழகப்பனைச் சந்தித்து, இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
எம்எல்ஏ வீட்டில் அதிகரித்த பாதுகாப்பு
காலை நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே அருள் விக்னேஷ் வீட்டின் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் பிற்பகலில் இருந்து கூடுதல் போலீஸ் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
கைது நடவடிக்கைக்கு வாய்ப்பு?
விசாரணை அதிகாரி நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி வரும் இதே நேரத்தில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருப்பது பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது. இந்த வழக்கில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.