Tamil Nadu Medial Insurance Scheme : மருத்துவம் என்பது சலுகை அல்ல, குடிமக்களின் உரிமை என்பது ஜனநாயக விழுமியங்களில் முக்கியமானது. அந்த வகையில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட முன்னோடித் திட்டம்தான் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்" ஆகும்.
அந்த வகையில், கலைஞர் காப்பீட்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டமாக பரிமாணம் பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் பயணம், சிறப்பு உள்ளிட்டவையோடு, புதிய பயனர்கள் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்வது எப்படி உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
2012: கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்பட்டு 'முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' (CMCHIS) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சிகிச்சை தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டது.
2018: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் - PMJAY திட்டத்துடன் தமிழ்நாடு அரசின் காப்பீட்டுத் திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டது. ஆண்டு ஒன்றுக்கு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படுகிறது.
2026: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் விஜய் இன்று அறிவித்தார்.
பெரம்பூரில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான “பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை" அமைக்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு— TN DIPR (@TNDIPRNEWS) August 19, 2026
தமிழ்நாடு அரசின் இந்த காப்பீட்டுத் திட்டத்தை பல பொருளாதார அறிஞர்கள் பாராட்டி உள்ளனர். உதாரணமாக நோபல் விருதுபெற்ற அறிஞர் அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டிரீஸ் தங்களது "An Uncertain Glory: India and its Contradictions (2013)" நூலில், இந்தியாவில் கடுமையான மருத்துவச் செலவுகளால் ஏழை எளிய குடும்பங்கள் மேலும் வறுமைக்குள் தள்ளப்படுவதை தடுப்பதில், தமிழ்நாட்டின் பொதுச் சுகாதார அமைப்பும், மருத்துவக் காப்பீட்டு முறையும் தேசிய அளவில் முன்னோடியாகச் செயல்படுவதை பாராட்டையுள்ளனர்.
இந்தியாவின் சுகாதார பொருளாதார சமத்துவமின்மை குறித்த ஆய்வுக் கட்டுரைகளில், தமிழ்நாடு தனது காப்பீட்டுத் திட்டம் மூலம் தனியார் மருத்துவக் கட்டமைப்பை ஏழை மக்களுக்கான பொதுப் பயன்பாட்டிற்கு மாற்றிய விதத்தை உலகளாவிய மருத்துவ ஆய்விதழான The Lancet பாராட்டியுள்ளது.