SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை - பயனடைவது எப்படி? A to Z இதோ

தமிழ்நாட்டின் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் முதல் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) வரையிலான வரலாறு, சிறப்பம்சங்கள் மற்றும் புதிய ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்.

Written By Sudharsan G
Published: Aug 19, 2026, 05:21 PM IST | Updated: Aug 21, 2026, 04:32 PM IST
Join

Tamil Nadu Medial Insurance Scheme : மருத்துவம் என்பது சலுகை அல்ல, குடிமக்களின் உரிமை என்பது ஜனநாயக விழுமியங்களில் முக்கியமானது. அந்த வகையில், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட முன்னோடித் திட்டம்தான் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்" ஆகும்.

அந்த வகையில், கலைஞர் காப்பீட்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டமாக பரிமாணம் பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் பயணம், சிறப்பு உள்ளிட்டவையோடு, புதிய பயனர்கள் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்வது எப்படி உள்ளிட்ட முழுமையான விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.

கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

திட்டத்தின் தோற்றம்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நோக்கம்

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பரிணாம வளர்ச்சி

2012: கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்பட்டு 'முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்' (CMCHIS) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சிகிச்சை தொகை ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டது.

2018: மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் - PMJAY திட்டத்துடன் தமிழ்நாடு அரசின் காப்பீட்டுத் திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டது. ஆண்டு ஒன்றுக்கு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படுகிறது.

2026: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் விஜய் இன்று அறிவித்தார்.

முக்கிய சிகிச்சை தொகுப்புகள்

ஒபாமா Care திட்டத்திற்கு முன்...

தமிழ்நாடு அரசின் காப்பீட்டுத் திட்டத்திற்கான பாராட்டு

தமிழ்நாடு அரசின் இந்த காப்பீட்டுத் திட்டத்தை பல பொருளாதார அறிஞர்கள் பாராட்டி உள்ளனர். உதாரணமாக நோபல் விருதுபெற்ற அறிஞர் அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டிரீஸ் தங்களது "An Uncertain Glory: India and its Contradictions (2013)" நூலில், இந்தியாவில் கடுமையான மருத்துவச் செலவுகளால் ஏழை எளிய குடும்பங்கள் மேலும் வறுமைக்குள் தள்ளப்படுவதை தடுப்பதில், தமிழ்நாட்டின் பொதுச் சுகாதார அமைப்பும், மருத்துவக் காப்பீட்டு முறையும் தேசிய அளவில் முன்னோடியாகச் செயல்படுவதை பாராட்டையுள்ளனர்.

இந்தியாவின் சுகாதார பொருளாதார சமத்துவமின்மை குறித்த ஆய்வுக் கட்டுரைகளில், தமிழ்நாடு தனது காப்பீட்டுத் திட்டம் மூலம் தனியார் மருத்துவக் கட்டமைப்பை ஏழை மக்களுக்கான பொதுப் பயன்பாட்டிற்கு மாற்றிய விதத்தை உலகளாவிய மருத்துவ ஆய்விதழான The Lancet பாராட்டியுள்ளது.

காப்பீட்டு திட்ட அட்டை - விண்ணப்பிப்பது எப்படி?

1. தகுதிகள்

2. தேவையான ஆவணங்கள்

3. விண்ணப்பிக்கும் நேரடி வழிமுறை

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES