• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அப்டேட்!

அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அப்டேட்!

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் நகல், ஆசிரியர் பட்டயத் தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாக இரண்டு முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Aug 17, 2026, 03:32 PM IST|Updated: Aug 17, 2026, 03:42 PM IST
joinshare
அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான முக்கிய அப்டேட்!
Image Credit: Tamil nadu School Education Department

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

2

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

3

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

4

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

5

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேல்நிலை இரண்டாமாண்டு துணைத்தேர்வு மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (DEE) தொடர்பான இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான விடைத்தாள் நகல் பதிவிறக்கம், மறுமதிப்பீடு/மறுகூட்டல் விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பட்டயத் தேர்வு முடிவுகள், விடைத்தாள் ஒளிநகல் கோரும் வழிமுறைகள் விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளன.

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு விடைத்தாள் நகல் பதிவிறக்கம்

ஜூன், ஜூலை 2026ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் அரியர் துணைத்தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்:

1. விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்வது எப்படி?

13.08.2026 (வியாழக்கிழமை) பிற்பகல் முதல் விடைத்தாள் நகல்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

முகப்புப் பக்கத்தில் உள்ள Notification பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் “Hr. Sec. Supplementary Examinations, JUNE/JULY- 2026 - Scan Copy Download” என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.

தோன்றும் திரையில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. மறுகூட்டல் விண்ணப்பிக்கும் முறை:

விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்த மாணவர்கள் மட்டுமே மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும். அதே இணையதளத்தில் “Application for Retotalling / Revaluation” என்ற விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, முழுமையாகப் பூர்த்தி செய்து 2 நகல்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம்:

14.08.2026 (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11:00 மணி முதல் 17.08.2026 (திங்கட்கிழமை) மாலை 05:00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். (ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் ஆகஸ்ட் 16 ஞாயிறு ஆகிய அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக).

விண்ணப்பம் சமர்ப்பிக்கும் இடம்:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பணமாகச் செலுத்தி ஒப்படைக்க வேண்டும். தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, மயிலாடுதுறை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

3. கட்டண விவரங்கள்:

மறுமதிப்பீடு: பாடம் ஒவ்வொன்றிற்கும் – ரூ.505/-

மறுகூட்டல்: உயிரியல் (Biology) பாடம் மட்டும் – ரூ.305/-, இதர பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் – ரூ.205/-

4. உதவி எண்கள்:

விடைத்தாள் நகல் பதிவிறக்கம் மற்றும் மறுகூட்டல் / மறுமதிப்பீடு தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 9498383075, 9498383076 ஆகிய கைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு விடைத்தாள் ஸ்கேன் காபிக்கு விண்ணப்பிக்கலாம்

மே / ஜூன் 2026ல் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (D.El.Ed / DEE Exam) எழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னவென்றால் 12.08.2026 பிற்பகல் முதல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாமாண்டு / இரண்டாமாண்டு ஆசிரியர் கல்வி பயிற்சி மாணவர்கள், தாங்கள் பயின்ற ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

தனித் தேர்வர்கள், தாங்கள் விண்ணப்பம் சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் (DIET) நேரில் சென்று முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

2. விடைத்தாள் ஒளிநகல் பெற விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு முடிவுகளுக்குப் பின் விடைத்தாள் நகல் பெற விரும்பும் தேர்வர்கள் www.dge.tn.gov.in இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இணையதளத்தில் “DEE EXAM MAY / JUNE 2026 - Scan Copy” என்ற இணைப்பை கிளிக் செய்து மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய கட்டணத்துடன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (DIET) நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

3. முக்கிய நாட்கள் மற்றும் கட்டணம்:

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்: 14.08.2026 காலை 11:00 மணி முதல் 20.08.2026 மாலை 05:00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். கட்டணம் ஒரு பாடத்திற்கு  ரூ. 275/- (நேரில் பணமாகச் செலுத்த வேண்டும்). இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விடைத்தாள் Scan Copy கோரி விண்ணப்பிக்கும் தேர்வர்கள் மட்டுமே, விடைத்தாள் வந்த பிறகு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். அதற்கான அறிவிப்பு பின்னர் தனியாக வெளியிடப்படும்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu