• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Written ByKarthikeyan Sekar
Published: Oct 15, 2026, 11:02 AM IST|Updated: Oct 15, 2026, 11:06 AM IST
joinshare
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit: Tamil Nadu Disability Scholarship

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

2

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்... சூர்யவன்ஷி ஏன் விளையாடவில்லை - கேப்டன் சொன்ன காரணம்

3

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

4

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

5

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்வி பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை பெறத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா தெரிவித்துள்ளார்.  

மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற்று வரும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, வரும் 31.12.2026-க்குள் இ-சேவை மையம் வாயிலாக இணையவழியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்

அடையாள அட்டை, மருத்துவச் சான்றிதழ்: மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.  

குறைந்தபட்ச குறைபாடு சதவீதம்: மாற்றுத்திறன் சதவிகிதமானது குறைந்தபட்சம் 40% அல்லது அதற்கு மேல் இருத்தல் அவசியம்.  

கல்வித் தகுதி: அரசுப் பள்ளிகள் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயில்பவராக இருக்க வேண்டும்.  

மதிப்பெண் வரம்பு: 9 ஆம் வகுப்பிற்கு மேல் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் தங்களுடைய முந்தைய ஆண்டு இறுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.  

இதர உதவித்தொகை பெறாதிருத்தல்: கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகையை பழங்குடியினர், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட வேறு எந்தத் துறையிடமிருந்தும் பெறவில்லை என்பதை உறுதி செய்திட வேண்டும்.  

பள்ளி பயிலும் சான்றிதழ்: அரசு சிறப்புப் பள்ளிகளில் பயில்வோர் தவிர்த்து, இதர அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தாங்கள் அப்பள்ளியில் பயின்று வருவதற்கான சான்றிதழை பள்ளி தலைமை அலுவலரிடம் பெற்று காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.  

விண்ணப்பிக்கும் இடம்: மாணவர்கள் பயிலும் பள்ளி, கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளதோ, அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மட்டுமே கல்வி மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.  

வேறு மாவட்ட அட்டை வைத்திருப்போர்: மாற்றுத்திறனாளி மாணவர்கள் வைத்துள்ள அடையாள அட்டை ஒரு மாவட்டத்தைச் சேர்ந்ததாகவும், அவர்கள் கல்வி பயில்வது வேறு மாவட்டமாகவும் இருப்பின், தற்போது கல்வி பயிலும் மாவட்டம் எதுவோ அம்மாவட்டத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  

தொலைதூரக் கல்வி பயில்பவர்கள்: தொலைதூரக் கல்வி பயிலும் மாணவ / மாணவியர்கள் தாங்கள் குடியிருக்கும் மாவட்டத்திலேயே விண்ணப்பிக்கலாம். எனினும், அவர்கள் கல்வி பயிலும் பல்கலைக்கழகத்திலிருந்து முறையான சான்றிதழைப் பெற்று இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.  

பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான விதிமுறை: பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவ / மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்களை வாசிப்பதற்கு உதவியாக நியமிக்கப்பட்டவரின் விவரங்களை, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்று, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

கூடுதல் விவரங்களுக்கு ; இது தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், காஞ்சிபுரம் அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-29998040 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா தெரிவித்துள்ளார்.   
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu