SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழக அரசின் இலவச லேப்டாப் சிப்-லெவல் பயிற்சி: 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

Tamil Nadu Free Laptop Chip Level Training : தமிழ்நாடு அரசு லேப்டாப் சிப் லெவல் பயிற்சிகளை வழங்க உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 06, 2026, 05:13 PM IST | Updated: Oct 06, 2026, 05:19 PM IST
Join

Tamil Nadu Free Laptop Chip Level Training  : தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சுயதொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோருக்காக "5 நாள் லேப்டாப் ஹார்டுவேர் மற்றும் சிப்-லெவல் நேரடி தொழிற்பயிற்சி" அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12.10.2026 முதல் 16.10.2026 வரை 5 நாட்களுக்கு, தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி சென்னையில் நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் இடம்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032.  

5 நாட்களுக்கான விரிவான பாடத்திட்டம்:

பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் சுயமாக தொழில் தொடங்கும் அளவுக்கு, ஐந்து நாட்களும் முழுமையான செயல்முறை விளக்கங்களுடன் கூடிய பாடத்திட்டம் பின்வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது:  

நாள் 1: லேப்டாப் அடிப்படைகள், அசெம்பிளிங்

லேப்டாப் பற்றிய அடிப்படை அறிமுகம், லேப்டாப்பைப் பிரித்தல் மற்றும் மீண்டும் பொருத்துதல்.

அடாப்டர் பரிசோதனை முறைகள்.  

ரேம், ரோம் வகைகள் மற்றும் சிபியூ சாக்கெட்டுகள் குறித்த முழுமையான விளக்கம்.  

மதர்போர்டு வகைகள், சிப் செட்கள் மற்றும் ஆர்க்கிடெக்ச்சர் ஆய்வு.  

ஹார்டுவேர் பழுதுகளைக் கண்டறிந்து சரிசெய்தல், எரர் குறியீடுகள்பகுப்பாய்வு.  

OS Installation மற்றும் டிரைவர் நிறுவும் நேரடிப் பயிற்சி.  

நாள் 2: சிப்-லெவல் கூறுகள், சாலிடரிங் நுட்பங்கள்

சிப்-லெவல் சேவைகள் பற்றிய அடிப்படை அறிமுகம்.  

SMT கூறுகள் மற்றும் மேம்பட்ட சிப்-லெவல் கூறுகள் குறித்த விளக்கம் மற்றும் பழுது கண்டறிதல்.  

ரெசிஸ்டர், கெபாசிட்டர், இண்டக்டர், டையோடு, NPN & PNP டிரான்சிஸ்டர்கள், UJT, FET மற்றும் MOSFET ஆகியவற்றின் அமைப்பு மற்றும் செயல்முறைப் பயிற்சி.  

மதர்போர்டில் இருந்து உதிரிபாகங்களை அகற்றுதல் மற்றும் மீண்டும் சாலிடரிங் செய்து பொருத்துவதற்கான தனிநபர் செயல்முறைப் பயிற்சி.  

மல்டிமீட்டர் மூலம் மின்னணு பாகங்களின் பழுதுகளைக் கண்டறியும் தனிப்பட்ட செயல்திறன் பயிற்சி.  

நாள் 3: மின்னழுத்தம், பவர் மேனேஜ்மென்ட்

மின்னழுத்தம், மின்னோட்டம், ஆம்பியர் மற்றும் வாட்ஸ் அடிப்படைக் கோட்பாடுகள்.  

NPN & PNP MOSFET, UJT, FET செயல்பாடு மற்றும் N-Channel, P-Channel MOSFET பழுது கண்டறிதல்.  

லேப்டாப்பில் பயன்படும் மின்னழுத்தங்கள் ஆய்வு: USB, CPU Fan, Power IC, HDD, DVD, BIOS IC, CMOS Battery, Keyboard, Power Switch, Wi-Fi, Processor, RAM, Speaker, Chipset, LED Light, Touchpad, Camera மற்றும் Wi-Fi Switch.  

நாள் 4: மதர்போர்டு டிரேசிங், டெட் லேப்டாப் சர்வீசிங்

மதர்போர்டில் மின்னழுத்தங்களைக் கண்டறியும் முறை.  

ஸ்கீமேடிக் வரைபடம் மூலம் மதர்போர்டை ஆய்வு செய்து பழுது நீக்கும் உத்திகள்.  

முற்றிலும் செயலிழந்த லேப்டாப்களில் பழுதுகளைத் துல்லியமாகக் கண்டறிந்து சரிசெய்யும் நுட்பங்கள்.  

நாள் 5: சிக்னல் டிரேசிங், பயாஸ் புரோகிராமிங்

சிக்னல் டிரேசிங் மற்றும் பயாஸ் புரோகிராமிங்.  

சார்ஜிங் பிரிவு மற்றும் ஸ்டாண்ட்பை பவர் பிரிவு பகுப்பாய்வு.  

SUS CLK, RTC RESET, INTRUDER, INTVREN, AC OK, S5 ENABLE, PGOOD, RSM ST, PWRBTOUT, SLP S4, SLP S3 போன்ற சிக்னல்களை ஆய்வு செய்தல் மற்றும் பயாஸ் ஃபிளாஷிங் (BIOS Flashing) பயிற்சி.  

அரசு மானியங்கள், தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்: இந்தப் பயிற்சியின் மிக முக்கிய அம்சமாக, பயிற்சியின் நிறைவில் தொழில்முனைவோருக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நிதி உதவித் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விரிவான ஆலோசனைகளும் விளக்கங்களும் வழங்கப்படும். இதன்மூலம் பயிற்சியாளர்கள் உடனடியாகத் தொழில் தொடங்கத் தேவையான முதலீட்டு வழிகாட்டுதலையும் பெற முடியும்.  

பங்கேற்பதற்கான தகுதிகள்:

கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அடிப்படை கணினி அறிவு இருப்பது அவசியம்.   
வயது வரம்பு: 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.  

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்: ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் என ஆர்வமுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.  

சான்றிதழ் மற்றும் தங்கும் விடுதி வசதி: பயிற்சியை முழுமையாக முடிக்கும் அனைவருக்கும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படும். வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பயிற்சியாளர்களின் வசதிக்காகக் குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதியும் உண்டு. முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.  

முன்பதிவு மற்றும் தொடர்பு எண்கள்: பயிற்சியில் கலந்துகொள்ள முன்கூட்டியே பதிவு செய்வது கட்டாயமாகும். இணையதள முகவரி www.editn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று உடனடியாகப் பதிவு செய்துகொள்ளலாம். தொடர்பு எண்கள்: 8668100181, 9360221280. தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES