• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /உரங்களை அதிக விலைக்கு விற்பனை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

உரங்களை அதிக விலைக்கு விற்பனை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசின் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 29, 2026, 13:56 IST|Updated: Sep 29, 2026, 14:03 IST
joinshare
உரங்களை அதிக விலைக்கு விற்பனை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
Image Credit: Tamil Nadu Government Fertilizer Warning

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!

2

வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? இலவசம் - முக்கிய அப்டேட்

3

டாஸ்மாக்கில் ரூ.1000க்கு மேல் மது வாங்கினால் யுபிஐ கட்டாயம்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை

4

தவெக எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்பியதற்கு ஆதாரம் எங்கே? கள்ளக்குறிச்சி ஆட்சியர் வழக்கில் நீதிபதிகள் கேள்வி!

5

நவம்பர் 24 பிரம்மாண்ட சூப்பர்மூன் : எந்த நேரத்தில், எப்படி, எப்போது பார்ப்பது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Government : புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது எனவும் சில்லரை விற்பனையாளர்கள் உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் . புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள், நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, கரும்பு, தென்னை, காய்கறிகள், மா, வாழை மற்றும் மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவையான இரசாயன உரங்களான யூரியா 6810 மெட்ரிக் டன்கள், டிஏபி 2120 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 1140 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 4870 மெட்ரிக் டன்கள், சூப்பர் பாஸ்பேட் 1060 மெட்ரிக் டன்கள் ஆகியன தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லரை உரிமம் பெற்ற உர விற்பனையாளர்கள் மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்வதோ அல்லது பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதோ கூடாது. மேலும், இது தொடர்பான ஆய்வின் போது கண்டறியப்பட்டாலோ அல்லது புகார் ஏதும் பெறப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் கவனத்திற்கு

* உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து, அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்திட வேண்டும்.

* உர விற்பனையாளர்கள் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை கொள்முதல் செய்வதும், விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது.

* உர மூட்டையின்மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது.

* விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விபர பலகையினை விவசாயிகளின் பார்வையில் படும்படி வைத்து தினசரி பராமரிக்கப்பட வேண்டும்.

* உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் மட்டும் விற்பனை செய்திட வேண்டும். விற்பனை முனையக் கருவியில் உள்ள இருப்பும், உண்மை இருப்பும் சரியாக இருக்குமாறு உர இருப்பு விவரத்தினை பராமரித்திட வேண்டும்.

* விவசாயிகளுக்கு தேவையற்ற இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது.

* தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்தல் கூடாது.

மேலும், மாவட்டத்தில் உர ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது, உரங்களை, அதிக விலைக்கு விற்பனை செய்தல், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அத்தியாவாசிய பண்டங்கள் சட்டம் 1955, உரக்கட்டுபாட்டு ஆணை 1985 மற்றும் உர நகர்வு கட்டுப்பாட்டு ஆணை 1973 ஆகியவற்றின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீறினால் உரஉரிமம் இரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது என்ற தகவலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா அவர்கள் தெரிவித்துள்ளார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu