SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழ்நாடு அரசின் மின் மோட்டார் மானியம் ரூ.3.60 லட்சம் பெற யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Tamil Nadu Government farmer subsidy : தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கான ரூ.3.60 லட்சம் வரை மின் மோட்டார் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தாட்கோ அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 29, 2026, 02:42 PM IST | Updated: Oct 29, 2026, 02:58 PM IST
Join

Tamil Nadu Government farmer subsidy : தமிழ்நாடு அரசின் சமூக நீதித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ - TAHDCO) வாயிலாக, ஆதிதிராவிட விவசாயிகளின் பாசன வசதியை மேம்படுத்தவும், விவசாய உற்பத்தித் திறனைப் பெருக்கி அவர்களின் நிலையான வருமானத்தை உயர்த்தவும் "வளமிகு வேளாண்மை உதவி திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 1,000 ஆதிதிராவிட விவசாயிகளுக்குத் தட்டுப்பாடின்றி விரைவாக மின் இணைப்பு வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.26.09 கோடியை நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.  

மேலும் படிக்க | ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கும் முக்கிய எச்சரிக்கை

90% வரை அரசு மானியம் – குதிரைத்திறன் வாரியான நிதிப் பங்கீடு:

விவசாயப் பாசனத் தேவைக்கான மின் மோட்டாரின் குதிரைத்திறன் அளவுக்கு ஏற்ப, மின் இணைப்பு பெறுவதற்குத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்குச் செலுத்த வேண்டிய மொத்த கட்டணத்தில் 90 சதவீதத் தொகையைத் தாட்கோ அமைப்பே நேரடி மானியமாக வழங்குகிறது. எஞ்சிய 10 சதவீதத் தொகையை மட்டுமே விவசாயிகள் தங்களின் சொந்தப் பங்களிப்பாகச் செலுத்த வேண்டும்.  

5 குதிரைத்திறன் (5 HP): மொத்தத் தொகை ரூ.2,50,000-ல், தாட்கோ மானியம் ரூ.2,25,000 (90%), விவசாயியின் பங்களிப்புத் தொகை ரூ.25,000 (10%).  

7.5 குதிரைத்திறன் (7.5 HP): மொத்தத் தொகை ரூ.2,75,000-ல், தாட்கோ மானியம் ரூ.2,47,500 (90%), விவசாயியின் பங்களிப்புத் தொகை ரூ.27,500 (10%).  

10 குதிரைத்திறன் (10 HP): மொத்தத் தொகை ரூ.3,00,000-ல், தாட்கோ மானியம் ரூ.2,70,000 (90%), விவசாயியின் பங்களிப்புத் தொகை ரூ.30,000 (10%).  

15 குதிரைத்திறன் (15 HP): அதிகபட்ச மொத்தத் தொகையான ரூ.4,00,000-ல், தாட்கோ மானியம் ரூ.3,60,000 (90%), விவசாயியின் பங்களிப்புத் தொகை ரூ.40,000 (10%).  

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:

இத்திட்டத்தின் கீழ் 90% கட்டண மானியம் மற்றும் விரைவு மின் இணைப்பு பெற விரும்பும் விவசாயிகள் கீழ்க்காணும் தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்:  

1. சமூகப் பிரிவு: விண்ணப்பதாரர் கண்டிப்பாக ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.  

2. குடும்ப ஆண்டு வருமானம்: விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.  

3. நில உரிமை மற்றும் பட்டா: விவசாய நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் சொந்தமாக இருக்க வேண்டும்; அதற்கான முறையான பட்டா ஆவணங்கள் அவசியமாகும்.  

4. நீர் ஆதாரம்: விண்ணப்பதாரரின் சொந்த விவசாய நிலத்தில் பயன்பாட்டில் உள்ள திறந்தவெளி கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு (Borewell) கண்டிப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.  

5. மின் பகிர்மான பதிவு: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் விவசாய மின் இணைப்பு கோரி ஏற்கனவே பதிவு செய்திருக்க வேண்டும்.  

6. விண்ணப்பதாரர் இதற்கு முன்னர் தாட்கோ திட்டங்களின் கீழ் மின் இணைப்பு மானியம் அல்லது பிற நிதிப் பலன்களைப் பெற்றவராக இருக்கக்கூடாது.  

விண்ணப்பிக்கும் நடைமுறை:

தகுதியுடைய ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://tahdco.com/](https://tahdco.com/) வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, தாட்கோ மூலமாக அனுமதிக்கப்படும் மானியத் தொகை நேரடியாகத் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்குச் செலுத்தப்படும். அதன்பின் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தட்கல் மின் இணைப்பு விரைந்து வழங்கப்படும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES