SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 4 வகை கேக் - அரசின் கண்டிஷன் என்ன? Explained

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு 4 வகை கேக் கொடுக்க திட்டமிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அதற்கான டெண்டர் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 11, 2026, 02:14 PM IST | Updated: Oct 11, 2026, 02:30 PM IST
Join

Tamil Nadu Government : நவம்பர் 14 அன்று கொண்டாடப்படவுள்ள குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தித்திப்பான பரிசாகப் பிராண்டட் ஸ்பாஞ்ச் கேக் வழங்க தமிழ்நாடு அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சுமார் 61,84,566 மாணவர்களுக்கு இந்த கேக்குகளைக் கொள்முதல் செய்து நேரடியாகப் பள்ளிகளுக்கு வழங்கும் வகையில் குறுகிய கால மின் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர்கள் சட்டம், 1998 மற்றும் விதிகள் 2000-ன் கீழ் கடுமையான வழிகாட்டுதல்கள் மற்றும் தரக்கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.  

மேலும் படிக்க: வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

4 சுவைகள் மற்றும் எடை விவரம்:

வழங்கப்படும் கேக் ஒரே சுவையில் இல்லாமல், மாணவர்கள் விரும்பி உண்ணும் வகையில் குறைந்தது 4 அங்கீகரிக்கப்பட்ட சுவைகளில் இருக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி கலவை பழங்கள், கிளாசிக் வெண்ணிலா, ரிச் சாக்லேட் மற்றும் பட்டர் மில்க் ஆகிய நான்கு வகைகளில் கேக் தயாரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தனிநபர் கேக் பாக்கெட்டும் 45 கிராம் எடையுடன் (± 2 கிராம்) பேக் செய்யப்பட்டிருக்க வேண்டும்.  

தரம் மற்றும் சுவைக்கான கடுமையான விதிகள்:

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முதலிடம் அளிக்கும் வகையில் தரம் சார்ந்த முக்கிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கேக் மிகவும் மென்மையாகவும், பஞ்சு போன்ற அமைப்பிலும், நறுமணத்துடனும் இருக்க வேண்டும். எந்தவித பூஞ்சை, கெட்ட வாடை, பூச்சித் தொற்று அல்லது செயற்கை ரசாயன சுவைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக, டிரான்ஸ் ஃபேட்மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட செயற்கை நிறமிகள் முற்றிலும் பயன்படுத்தப்படக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

30 நாட்கள் ஆயுட்காலம் கட்டாயம்:

கேக்குகளின் பயன்பாட்டுக் காலம் நீட்டிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதோடு, நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று TNCSC-யின் களக் கிடங்குகளுக்கு வந்து சேரும் தேதியிலிருந்து, இன்னும் குறைந்தது 30 நாட்களுக்கு அது கெட்டுப்போகாமல் தரமாக இருக்கும் வகையில் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்காக NABL ஆய்வகத்தின் சோதனை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  

பேக்கிங் மற்றும் அரசு இலச்சினை:

ஒவ்வொரு கேக்கும் பல அடுக்கு ஈரப்பதம் புகாத உணவுப் பாதுகாப்புத்தன்மை கொண்ட பிலிம் கவரில் தனித்தனியாக காற்றுப்புகாமல் அடைக்கப்பட வேண்டும். அந்த உறையில் பிராண்ட் பெயர், சுவை வகை, நிகர எடை 45 கிராம் வரை, FSSAI உரிம எண் மற்றும் சின்னம், தொகுதி எண், தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி ஆகியவை தெளிவாக அச்சிடப்பட வேண்டும். மேலும், TNCSC வழிகாட்டுதலின்படி அரசின் சிறப்பு இலச்சினை அல்லது சிறப்பு ஸ்டிக்கர்கள் பேக்கிங்கில் இடம்பெற வேண்டும்.  

டெண்டர் நடைமுறை மற்றும் விநியோகம்:

இந்தக் கொள்முதலில் பங்கேற்கும் நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் விநியோகக் கட்டமைப்பு கொண்ட முன்னணி பிராண்டுகளாக இருக்க வேண்டும். இரண்டு உறை முறை மூலம் www.tntenders.gov.in இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். தொழில்நுட்ப மதிப்பீட்டின் போது பரிசீலனைக் குழுவிற்கு ஒவ்வொரு சுவையிலும் மாதிரி கேக்குகளை வழங்கித் தரப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் போக்குவரத்து, இறக்குமதி மற்றும் காப்பீட்டுச் செலவுகளுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து TNCSC கிடங்குகளுக்கும் நேரடியாகப் பொருட்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: மாதம் ரூ.12,000 உதவித்தொகை - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES