• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

Tamil Nadu VAO Office Services: கிராம நிர்வாக அலுவலகங்களிலேயே 33 வகையான சான்றிதழ்கள் பெற மனு அளிக்கலாம். இது குறித்து இங்கே வரிவாக பார்க்கலாம்.

Written ByKarthikeyan Sekar
Published: Oct 11, 2026, 03:56 PM IST|Updated: Oct 11, 2026, 04:10 PM IST
joinshare
பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!
Image Credit: Tamil Nadu government VAO Office services

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu VAO Office Services: கிராமப்புற மற்றும் நகர்ப்புற பொதுமக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகள், சான்றிதழ்கள் மற்றும் நிலம் சார்ந்த பணிகளுக்காகத் தாலுகா அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. கிராம மக்கள் தங்களது கிராமத்திலேயே செயல்படும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலேயே நேரடியாக 33 வகையான சேவைகளுக்கான மனுக்களைச் சமர்ப்பிக்கும் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.  

30 நாட்களில் உடனடித் தீர்வு – கட்டணம் முற்றிலும் இலவசம்:

வருவாய்த் துறையின் இந்த மக்கள் நலத் திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் மனுக்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது, முற்றிலும் இலவசமாகச் சேவை வழங்கப்படும். மேலும், சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மீது அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிப்படையான மற்றும் விரைவான நிர்வாகத்தை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.  

விஏஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்கக்கூடிய 33 வகையான மனுக்கள் விவரம்:

அடிப்படை வசதிகள்: குடிநீர் வசதி, குழாய் பழுது, சாலை பராமரிப்பு, புதிய சாலை, தெருவிளக்கு பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு, கழிவுநீர் சாக்கடை அகற்றுதல், பொதுக் கிணறு பராமரிப்பு, மின் இணைப்பு, மின்சாரப் பிரச்சனை, கழிப்பறை கட்டுமானம் சுகாதாரம், பொது இடம் பூங்கா பராமரிப்பு, பொதுக் கட்டிடம் சமூகக் கூடம் பராமரிப்பு.  

நிலம், வருவாய் சார்ந்தவை: பட்டா சிட்டா பெயர் மாற்றம், வீட்டுமனை பட்டா வழங்கல், நில அளவை நில அளவீடு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஏரி குளம் பராமரிப்பு, விவசாய சாலை அமைத்தல்.

சான்றிதழ்கள், பதிவுகள்: பிறப்புச் சான்றிதழ் கோரிக்கை, இறப்புச் சான்றிதழ் கோரிக்கை, வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சுய உதவிக்குழு பதிவு.  

நலத்திட்டங்கள், ஓய்வூதியங்கள்: முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விபத்து நிவாரண உதவி, ரேஷன் கடை ரேஷன் பொருள் விநியோகம், பள்ளி சேர்க்கை மாணவர் உதவித்தொகை.  

விவசாயம், மருத்துவம், சுகாதாரம்: மருத்துவமனை வசதி ஆரம்ப சுகாதார நிலையம், வேளாண் மானியம் உதவித்தொகை, பயிர்க் காப்பீடு, கால்நடை மருத்துவம் சிகிச்சை, அங்கன்வாடி முன்பள்ளி வசதி.  

மனு அளிக்கும் எளிய நடைமுறை:

பொதுமக்கள் தங்கள் கோரிக்கையைத் தெளிவான எழுத்துப்பூர்வ மனுவாக எழுதி, அதனுடன் ஆதார் அட்டை அல்லது ஏதேனும் ஓர் அரசு அடையாள அட்டை நகல் மற்றும் உரிய ஆவணங்களை இணைத்து நேரடியாக விஏஓ அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மனுவைச் சமர்ப்பித்தவுடன் அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.  

உதவி மற்றும் கூடுதல் தகவல்களுக்கு:

இத்திட்டம் தொடர்பான சந்தேகங்கள், தகவல்கள் மற்றும் புகார்களுக்கு பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம். மேலும், www.tn.gov.in/revenue என்ற தமிழ்நாடு வருவாய்த் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியிலும் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu