8-வது, 12-வது பாஸா? தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு- முழு விவரம்!
Tamil Nadu Govt Jobs for 8th, 12th Pass: திண்டுக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Govt Jobs for 8th, 12th Pass: அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தி. திண்டுக்கல் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய இந்தப் பணிகளுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்த முழுமையான விவரங்களைத் தொகுப்பாகக் கீழே விரிவாகக் காணலாம்.
1. திண்டுக்கல்: தொட்டில் குழந்தை திட்டக் காலிப்பணியிடங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்டத்தில் காலியாக உள்ள காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் மற்றும் காவலர் ஆகிய 2 பணியிடங்களைத் தற்காலிகத் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப மாவட்ட ஆட்சியர் திருமதி துர்காமூர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2. திண்டுக்கல் பணிகளுக்கான கல்வித்தகுதி மாத ஊதியம்
காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; இதற்கு மாதத் தொகுப்பூதியமாக ரூ.7,500 வழங்கப்படும். காவலர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது; இதற்கு மாதத் தொகுப்பூதியமாக ரூ.4,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. திண்டுக்கல் - வயது வரம்பு, பணி அனுபவம், தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் 42 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், குழந்தைகளைக் கையாளுதல் மற்றும் பராமரிப்பதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தகுதியான நபர்கள் நேர்காணல் குழு மூலம் முறையாகத் தேர்வு செய்யப்பட்டுப் பணி நியமனம் வழங்கப்படுவர்.
4. திண்டுக்கல் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் செய்தி வெளியான 15 நாட்களுக்குள் தங்களது விண்ணப்பங்களை "மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பிளசிங்ஸ், பிளாட் எண்.4, 2-வது குறுக்குத்தெரு (மாடி), எஸ்.பி.ஆர் நகர், மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்), திண்டுக்கல் - 624 004" என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
5. ராணிப்பேட்டை: வேலைவாய்ப்பு
ராணிப்பேட்டை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் முற்றிலும் தற்காலிகத் தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள ஒரு "புறத்தொடர்பு பணியாளர்" பதவி நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு மாதத் தொகுப்பூதியமாக ரூ.10,592 வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
6. பணிக்கான தகுதிகள், வயது வரம்பு
அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சிறந்த தகவல் தொடர்புத் திறன் அவசியமாகும். இப்பணி சார்ந்த முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரரின் வயது 42-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
7. விண்ணப்பிக்கும் முறை, முக்கிய நிபந்தனைகள்
விண்ணப்பங்களை ranipet.nic.in தளத்தில் பதிவிறக்கம் செய்து, புகைப்படத்துடன் கூடிய பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் நகல்களை 15 நாட்களுக்குள் "மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 4வது தளம், F-பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராணிப்பேட்டை, தொலைபேசி: 04172-299347 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையற்ற மற்றும் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.