SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழ்நாட்டு மக்களுக்கு குட் நியூஸ்! இலவச சிகிச்சை முதல் காப்பீடு வரை - Explained

Tamil Nadu Health Budget 2026: தமிழ்நாடு மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முதல் வீட்டில் சுகப்பிரசவம் பார்ப்பது தட்டணைக்குரிய குற்றம் வரையில் முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Aug 18, 2026, 01:14 PM IST | Updated: Aug 21, 2026, 04:32 PM IST
Join

Tamil Nadu Health Budget 2026: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கைகள் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரத்துறை மானியக்கோரிக்கைகளின்போது அமைச்சர் அருண்ராஜ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை முதல் வீட்டில் சுகப்பிரசவம் பார்ப்பது தண்டைக்குரிய குற்றம் என்ற சட்டம் இயற்றுவது வரையிலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

முக்கிய அறிவிப்புகள், கொள்கை சீர்திருத்தங்கள்

87 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, நவீன சவால்களுக்கு ஏற்ப திருத்தியமைக்கப்பட்ட புதிய பொது சுகாதார சட்டமாக மாற்றப்படும்.

வீடு மற்றும் மருத்துவமனை அல்லாத இடங்களில் சுயபிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றமாக்கப்படும். முதல் முறையாக சமூகம், குடும்பம் மற்றும் தனிமனித அளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆரோக்கிய வாழ்விற்கான நலக்கொள்கை (Positive Health Policy) உருவாக்கப்படும்.
மருத்துவக் கட்டமைப்பில் மாநில முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ நிறுவனங்களை உருவாக்க புதிய சட்டம் இயற்றப்படும்.

மகளிரின் மாதவிடாய் விலக்கு காலத்தில் காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகளுக்கு முதல் முறையாக மாதவிடாய் விலக்கு ஆற்றுப்படுத்துதல் கொள்கை (Peri- Menopausal Care Policy) செயல்படுத்தப்படும்.

நலிவடைந்த பிரிவினருக்கான நலத்திட்டங்கள்

தமிழ்நாட்டில் முதல் முறையாக, 70 வயதிற்கு மேற்பட்ட சுமார் 38 இலட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான உச்ச வரம்பின்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

எச்.ஐ.வி. / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் தொடர் சிகிச்சையை மேம்படுத்த ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் மாதாந்திர நிதியுதவி உயர்த்தி வழங்கப்படும்.

மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு புதிய நடமாடும் மருத்துவக்குழு, 25 மலைக்கிராமங்களில் 25துணை சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்படுவர்.

Type-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஆண்டு முழுவதும் இலவச இன்சுலின் மருந்துகள் ரூ.9.94 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

கர்ப்பகாலத்தில் இரத்தசோகையினால் பாதிக்கப்படும் சுமார் 1.22 இலட்சம் தாய்மார்களுக்கும், தீவிர இரத்தசோகை உள்ள சுமார் 10,000 வளரிளம்
பெர்ரிக்கார்பாக்சிமால்டோஸ் ஊசி ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். 4 அரசு மருத்துவமனைகளில் புதிய முதியோர் மருத்துவ பெண்களுக்கும் அலகுகளும், 2 மருத்துவமனைகளில் நோய் ஆதரவு சிகிச்சை மையங்களும் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

அனைவருக்கும் சுகாதார சேவைகள்

30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் ஆண்டிற்கு ஒருமுறை 14 அடிப்படை பரிசோதனைகளை உள்ளடக்கிய நலம் 360 இலவச உடல் நலப்பரிசோதனை 1,257 அரசு சுகாதார நிலையங்களில் ரூ.51 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். நலம்-AI WhatsApp Chatbot மூலம் மருத்துவ ஆலோசனைக்கான முன்பதிவு வசதி அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

நகர்ப்புற மக்களுக்கு முதல் முறையாக வீட்டிற்கே சென்று இரத்த மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனை சேவைகள் பொது- தனியார் கூட்டு முறையில் செயல்படுத்தப்படும். 572 சுகாதார நிலையங்களில் ஒருங்கிணைந்த தொற்றாநோய் பராமரிப்பு மையங்கள் ரூ.43.53 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். 2030-ஆம் ஆண்டிற்குள் தொழுநோய் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய தீவிர தொழுநோய் கண்டறிதல் இயக்கம் வீடுதோறும் ரூ.26.71 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

20 மாவட்ட மருத்துவமனைகளில் வெப்பதாக்கம் சிகிச்சை மையங்களும், அனைத்து மாவட்டங்களிலும் 8,160 பேருக்கு அடிப்படை உயிர்காக்கும் சிகிச்சை பயிற்சியும் வழங்கப்படும். தாய்-சேய் நலம் மற்றும் குழந்தைகள் நலம் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 16.5 இலட்சம் மாணவர்களுக்கு இரத்தசோகை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் இரும்பு கண்மணி திட்டம் ரூ.6.37 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். 14 மாவட்டங்களில் சுமார் 10,000 கர்ப்பிணி தாய்மார்களுக்கு புளூடூத் இரத்த அழுத்தம் அளவிடும் கருவிகள் ரூ.2.01 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் சுமார் 4.5 இலட்சம் பச்சிளங்குழந்தைகளுக்கு 7 அரிய வகை மரபுசார் நோய்கள் கண்டறிதல் ரூ.7 கோடி மதிப்பீட்டில் Hub-and-Spoke முறையில் செயல்படுத்தப்படும். மிகக்குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியோ-ஜெனிசிஸ் பிரிவுகள் ரூ.16.81 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

பிறந்த குழந்தைகளுக்கு முதன் முறையாக வட்டார அளவில் 38 கையடக்க செவித்திறன் பரிசோதனை கருவிகள் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும். ஆட்டிசம் கண்டறிதல் திட்டம், குழந்தைகள் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையங்கள், உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்காக்கள், பள்ளி மாணவர்களுக்கு பல்சீரமைப்பு சிகிச்சை மற்றும் உடல் பருமன் தடுப்புத் திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்படும். உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை வழங்கும் தமிழ்நாடு மருத்துவ நகரம் (TN Medicity) உருவாக்கத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.128 கோடி மதிப்பீட்டில் 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 4 அரசு மருத்துவமனைகளுக்கு புதிய தாய் - சேய்நலக்கட்டிடங்கள், ரூ.98.85 கோடி மதிப்பீட்டில் 13 மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மேம்பாடுகள், ரூ.122.08 கோடி மதிப்பீட்டில் 8 கல்லூரி மருத்துவமனைகளில் புதுப்பித்தல் பணிகள், ரூ.45 கோடி மதிப்பீட்டில் 100 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள், ரூ.44 கோடி மதிப்பீட்டில் 50 ஆரம்பசுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டிடங்கள் என ரூ. 437.93 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ. 95.70 கோடி மதிப்பிலான புதிய உயரடுக்கு வெளிநோயாளிகள் பிரிவுக் கட்டடமும், மதுரை மற்றும் கள்ளக்குறிச்சியில் ரூ.66.93 கோடி மதிப்பிலான தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் அமைக்கப்படும். 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மாணவர் விடுதிகள் ரூ.379.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

31 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.233 கோடி மதிப்பிலான உயர்ரக மருத்துவ உபகரணங்களும், 10 மருத்துவமனைகளில் ரூ.73.82 கோடி மதிப்பிலான இருதய நோய் சிகிச்சைக்கான Cath Lab வசதிகள், ரூ.58.31 கோடி மதிப்பில் 113 விபத்து மற்றும் அவசர மருத்துவ மையங்களுக்கு உயிர்காக்கும் உபகரணங்கள், ரூ.25.14 கோடி மதிப்பில் 5 மருத்துவமனைகளில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை மையங்கள், ரூ.18.22 கோடி மதிப்பில் 200 புதிய ஹீமோடயாலிசிஸ் இயந்திரங்கள் ஆகியவையும் வழங்கப்படும்.

டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் மனிதவளம்

அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக ரூ.10.20 கோடி மதிப்பி AI-அடிப்படையிலான மருத்துவ பயனாளர் கருத்துப் பதிவு அமைப்பு, 24 மாவட்டங்களில் ரூ.5.50 கோடி மதிப்பில் CT Scan, MRI மற்றும் டிஜிட்டல் X-Ray படங்களை இணைக்கும் Centralized PACS, மருத்துவப் பயனாளிகளுக்கு தனித்துவ அடையாள எண் அமைப்பு மற்றும் 4 மருத்துவக் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மையங்கள் ஆகியவை நிறுவப்படும்.

மனிதவள வலுப்படுத்துதலில், 2,500 செவிலியர்கள் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்படுவர். 3,594 மருத்துவ பணியாளர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவர். 284 உயர்சிறப்பு மருத்துவ பணியிடங்கள் உருவாக்கப்படும், நகர்ப்புற பகுதிகளில் 2,443 இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 360 சிறப்பு மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவர்.

பாரம்பரிய மருத்துவம் மற்றும் தனிச்சிறப்பு முயற்சிகள்

பள்ளி மாணவர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க, 100 வட்டாரங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ அலகுகள் RBSK திட்டத்துடன் இணைத்து நிறுவப்படும். 2 மாவட்டங்களில் 23 வட்டாரங்களில் சித்த மருத்துவ ஆரோக்கிய ஊக்குவிப்புத் திட்டமும் செயல்படுத்தப்படும்.
விலங்குகளை கையாளும் சுமார் 2 இலட்சம் உள்ளாட்சி பணியாளர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி ரூ.2.22 கோடி மதிப்பில் வழங்கப்படும். 30 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்திய மருத்துவ முறை கருத்தரிப்பு சிகிச்சைமையங்கள் முதல் முறையாக நிறுவப்படும்.

ரூ.23,357 கோடி வரலாற்றுச் சிறப்பு மிக்க வரவு - செலவு ஒதுக்கீட்டுடன், தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை இந்தியாவின் சுகாதாரத் தலைமையிடமாக தனது நிலையை உறுதிப்படுத்துகிறது. பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை, நகர்ப்புறம் முதல் மலை கிராமங்கள் வரை, அடிப்படை நோய் தடுப்பு முதல் உயர்சிறப்பு சிகிச்சை வரை இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES