SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கிலோ வெங்காயம் ரூ.35.. ரேஷன் கடையில் எத்தனை முறை வாங்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு!

TN Ration Shop Onion Sale: ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுவது தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில் நேற்று முதல் வெங்காயம் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று முதல் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 11, 2026, 11:54 AM IST | Updated: Oct 11, 2026, 12:07 PM IST
Join

TN Ration Shop Onion Sale: தமிழக மக்களின் முக்கியமான ஆவணமாக ரேஷன் கார்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் கூட்டுறவுத்துறையின் கீழ் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. ரேஷன் அட்டைதாரர்களக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.  தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தமிழக அரசு வெங்காயமும் தற்போது விற்பனை செய்கிறது.

உச்சத்தில் வெங்காயம் விலை

தமிழகத்தில் வெங்காயம் விலை என்பது அதிரடியாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-ஐ எட்ட உள்ளது. கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 50-க்கும் அதிகமாகவும், சில்லறைக் கடைகளில் ஒரு கிலோ ரூபாய் 60-லிருந்தும் விற்பனையாகிறது. ஜூலை மாதத்தில் கிலோவுக்கு ரூ.20-ரூ.25 ஆக இருந்த வெங்காய விலை, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ரூ.30-ரூ.35 ஆக உயர்ந்து, ஆகஸ்ட் மாத இறுதியில் ரூ.50-ஐத் தாண்டியது. இதனால், சாமானியார்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க: வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை

இந்த நிலையில்,  ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தமிழக அரசு வெங்காயம் விற்பனை செய்கிறது.  தொடர்ந்து உயர்ந்து வரும் வெங்காய விலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஆக்ஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படவில்லை. இதனால், பொதுமக்கள் புகார் அளித்தனர். 

இந்த நிலையில், ரேஷன் கடைகளில் மீண்டும் வெங்காயம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஆகஸ்ட் மாத இறுதியில், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) மூலம் 910 மெட்ரிக் டன் வெங்காயத்தையும், NCCF-இடமிருந்து 65 மெட்ரிக் டன் வெங்காயத்தையும் அரசு கொள்முதல் செய்தது.

இரண்டாம் கட்டத்தில், மானிய விலையில் விற்பனை செய்வதற்காக, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் NAFED மூலம் 1,414.33 மெட்ரிக் டன்களையும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் NCCF-இடமிருந்து 460 மெட்ரிக் டன்களையும் அரசு கொள்முதல் செய்தது.  இந்த நிலையில், நேற்று சென்னையில் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இன்று பிற மாவட்டங்களில் வெங்காயம் விற்பனை துவங்கப்பட்டது.

எத்தனை முறை வெங்காயம் வாங்கலாம்?

கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் ஒரு குடும்ப அட்டைக்கு 1 எலோ வெங்காயம் ரு.35 என்ற விலையில் வாங்கலாம். வெளி சந்தையில் ரூ.60க்கு மேல் வெங்காயம் விற்பனை செய்யப்படும் நிலையில், ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரேஷன் கார்டு மூலம் ஒருமுறை மட்டுமே ரேஷன் கடைகளில்  வெங்காயம் வாங்க முடியும்.  இந்த நடவடிக்கையின் மூலம், வெங்காயத்தின் விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைத்து. குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு வெங்காயம் நியாயமான விலையில் தொடர்ந்து கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மாதம் ரூ.12,000 உதவித்தொகை - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES