• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து.. பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு.. எத்தனை நாட்கள்?

திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து.. பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு.. எத்தனை நாட்கள்?

Tirumala Tirupati Free Darshan: அக்டோபர் 10ஆம் தேதி அக்டோபர் 21ஆம் தேதி வரை திருப்பதியில் சர்வ தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் இதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Oct 11, 2026, 01:08 PM IST|Updated: Oct 11, 2026, 01:23 PM IST
joinshare
திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து.. பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு.. எத்தனை நாட்கள்?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அதிமுக கோட்டையே தகர்ந்தது.. 5 மாதத்தில் 3வது இடம்.. அன்புமணி கடும் சாடல்!

அதிமுக கோட்டையே தகர்ந்தது.. 5 மாதத்தில் 3வது இடம்.. அன்புமணி கடும் சாடல்!

2

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு... மாயமான மக்கள்... பாலங்கள், வீடுகள் தரைமட்டம்

3

திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து.. பக்தர்களுக்கு ஷாக் அறிவிப்பு.. எத்தனை நாட்கள்?

4

அக்டோபர் 19ல் சுக்கிரன் அஸ்தமனம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் துலங்கும்!

5

கிலோ வெங்காயம் ரூ.35.. ரேஷன் கடையில் எத்தனை முறை வாங்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tirumala Tirupati Free Darshan:  திருப்பதியில் ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரசனம் செய்து வருகின்றனர். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதற்கிடையில், சில முக்கிய நாட்களில் தேவஸ்தானம் பல்வேறு தரிசனங்களை ரத்து செய்து வருகிறது. அந்த வகையில், தேவஸ்தானம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சர்வ தரிசனம் ரத்து

திருப்பதியில் அக்டோபர் 11ஆம் தேதியான இன்று முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்கிறது. இதனால், தேவஸ்தானம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, அக்டோபர் 10ஆம் தேதியான நேற்று முதல் சர்வ தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதாவது, அக்டோபர் 10ஆம் தேதி முல் அக்டோபர் 21ஆம் தேதி வரை இலவச தரிசனம் (SSD  Tokens) டிக்கெட் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அக்டோபர் 22ஆம் தேதி முதல் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அக்டோபர் 23ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, பக்தர்கள் இதற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Tirupati Reels & Updates (@todotirupati)

 

விஐபி தரிசனம் ரத்து

அதே நேரத்தில், திருப்பதியில் 10 நாட்கள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் அக்டேபார் 12ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அக்டோபர் 11ஆம் தேதியான இன்று முதல் 20ஆம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அதே நேரத்தில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், ராணுவத்தினர் ஆகியோருக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகின்றன. அக்டோபர் 11 முதல் அக்டோபர் 19ஆம் தேதி வரை புரோட்டோகால் அந்தஸ்தில் உள்ள விஐபிக்களைத் தவிர, மற்றவர்களிடம் இருந்து விஐபி தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  எனவே, பக்தர்கள் இதற்கு ஏற்ப தங்கள் தரிசனங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவம் முக்கிய நிகழ்வுகள்

அக்டோபர் 12 முதல் 20 வரை ஒன்பது நாட்கள்  நவராத்திரி பிரம்மோற்சவம் திருப்பதியில் நடக்கறிது. அக்டோபர் 12ஆம் தேதி கொடியேற்றம் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் காலை மற்றும் மாலை வெவ்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் உலா வருகிறார். அக்டோபர் 13ஆம் தேதி சின்ன சேஷ வாகனம், அக்டோபர் 14ஆம் தேதி சிம்ம வாகனம், அக்டோபர் , அக்டோபர் 15ஆம் தேதி கல்பவிருட்ச வாகனம், அக்டோபர் 16ஆம் தேதி நவராத்திரி கருட சேவை, அக்டோபர் 17ஆம் தேதி கஜ வாகனம், அக்டோபர் 18ஆம் தேதி சந்திர பிரபை வாகனம், அக்டோபர் 19ஆம் தேதி தங்கத் தேரோட்டம், அக்டோபர் 20ஆம் தேதி சக்கர ஸ்நானத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tour Travel