SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு... ஒரு வாரம் வச்சு செய்யப்போகுது மழை!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பாதை காரணமாக நாளை (நவ. 23) முதல் நவ. 28 வரை சென்னை, டெல்டா, தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written By Sudharsan G
Published: Nov 22, 2026, 16:00 IST | Updated: Nov 22, 2026, 16:14 IST
Image Credit: AI Generated Image : ChatGPT
Join

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவ. 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை குறிப்பிட்டுள்ளது.

சுமார் 1.5 கி.மீ., உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மத்திய மேற்கு வங்கக்கடல் வழியாக வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், நாளை (நவ. 23) முதல் அடுத்த வாரம் சனிக்கிழமை (நவ. 28) வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | தூத்துக்குடிக்கு அடித்த மெகா ஜாக்பாட்: ரூ.38,000 கோடி முதலீட்டில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம்!

நவம்பர் 22 (இன்றைய) வானிலை கணிப்பு

நவம்பர் 23 (நாளைய) வானிலை கணிப்பு

நவம்பர் 24 (செவ்வாய்) வானிலை கணிப்பு

நவம்பர் 25 (புதன்) வானிலை கணிப்பு

மேலும் படிக்க | திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தடை வேணும்... CM விஜய்யின் நெக்ஸ்ட் மூவ் - நாளை விசாரணை?

நவம்பர் 26 (வியாழன்) வானிலை கணிப்பு

நவம்பர் 27 (வெள்ளி) வானிலை கணிப்பு

நவம்பர் 28 (சனி) வானிலை கணிப்பு

மிதமான மழை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மக்கள் கவனத்திற்கு...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (நவ. 23) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | தமிழகத்துக்கு இனி இன்னொரு பிரம்மாண்ட எக்ஸ்பிரஸ்வே: சென்னை - கோவை - தூத்துக்குடி புதிய சாலை

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES