கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று (நவம்பர் 25) வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, தேனி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி என மொத்தம் 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வட மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் நிலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.