SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.. சென்னையில் விடாமல் கொட்டும் கனமழை.. லேட்டஸ்ட் வானிலை அப்டேட்

TN Weather Update: தமிழகத்தில் இன்று (அக்டோபர் 19) எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 19, 2026, 08:24 AM IST | Updated: Oct 19, 2026, 08:41 AM IST
Join

TN Weather Update: தமிழகத்தில் ஒரு மாதமாக வறண்டு காணப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக மாநிலம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் நேற்றுமுன்தினம் இரவு 300 மி.மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. இந்த  நிலையில், இன்று எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று எங்கெல்லாம் கனமழை?

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவு பகுதிகள் முதல் மத்தியமேற்கு வங்கக்கடல்ப்பகுதிகள் வரை கர்நாடகா, தெற்கு ஆந்திரா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடஉள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 0.9 கிமீ உயரத்தில் வடஉள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 7.6 கிமீ உயரம் வரை மத்திய மேற்க்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

மேலும் படிக்க: கனமழை முன்னெச்சரிக்கை : 8 முக்கிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!

இதன் காரணமாக, இன்று (அக்டோபர் 19) சென்னை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். இதில் சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டதாக நேற்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. இதனால், சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு மட்டுமே இருப்பதாக தெரிவித்தது.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது.

அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்

தொடர்ந்து, அக்டோபர் 20ஆம் தேதி தேனி, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.  கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், பெரம்பலூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலூர் மாவட்டங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 21ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல், மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: புறம்போக்கில் வீடா? NOC இல்லாமல் கனெக்ஷன்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு Explained

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், விருதுநகர், தென்காசி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கரூர் மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெதர்மேன் சொன்ன தகவல்

 

வானிலை நிலவரம் குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறுகையில், "வளிமண்டல சுழற்சி வட தமிழகக் கடற்கரையை நோக்கித் திரும்புகிறது; இன்று நண்பகல் முதல் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு.

தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் சோமாலியக் கடற்கரைக்கு அப்பால்  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது இந்திய நிலப்பகுதியைப் பாதிக்கும் வாய்ப்பு குறைவு. இருப்பினும், மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முன்னதாக ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்த வளிமண்டல சுழற்சி, தற்போது மீண்டும் வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்கிறது. இதன் தாக்கத்தால், தமிழகத்தில் வடக்கு மற்றும் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசத் தொடங்கும்; இது அடுத்த 24 மணி நேரத்திற்குள் படிப்படியாக கிழக்குத் திசைக் காற்றாக மாறக்கூடும்.

தமிழகக் கடலோரப் பகுதிகளில் இன்று நண்பகல் முதல் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. பிற்பகல் அல்லது மாலை நேரங்களில் இந்த மழை உட்புற மாவட்டங்களுக்கும் பரவக்கூடும்” என்று கூறினார்.

மேலும் படிக்க: லீவ் முடிந்து சென்னை வர... தென் மாவட்ட மக்களுக்கு சிறப்பு ரயில் - முழு அட்டவணை இதோ
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES