SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அடுத்த ரவுண்ட் ஆரம்பம்! நவ.23 முதல் மிக கனமழை.. வெதர்மேன் முக்கிய அலர்ட்

TN Weather Update: நவம்பர் 23ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையக் கூடும் என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார். சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

Written By Umabarkavi K
Published: Nov 21, 2026, 09:19 IST | Updated: Nov 21, 2026, 09:26 IST
Join

TN Weather Update:  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை  விட்டுவிட்டு பெய்து வருகிறது. ஆனால், பெரிய அளவில் எங்கும் மழை பெய்யவில்லை. சமீபத்தில் வங்கக்கடலில் அக்வான் புயல் உருவானது. ஆனால், தமிழகத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில், நவம்பர் 23 முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்

இதுகுறித்து டெல்டா வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, கிழக்கு திசை அலைகளுடன் தொடர்புடைய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, 2026 நவம்பர் 23 முதல் 27ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையக்கூடும். சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

கிழக்கு திசைக் காற்றோட்டத்தில் நிலவும் ஒரு தாழ்வு மண்டலம், 2026-ஆம் ஆண்டு நவம்பர் 23 முதல் 27 வரை தமிழ்நாட்டில் பருவமழைச் சூழலைத் தீவிரமடையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் (நவம்பர் 21–22) பெரும்பாலும் வறண்ட வானிலையும், பனிமூட்டமான சூழலும் நிலவக்கூடும்.

தற்போது வீசும் வறண்ட வடதிசைக் காற்றுக்கு மாற்றாக, ஈரப்பதம் நிறைந்த கிழக்குத் திசைக் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால், நவம்பர் 23ஆம் தேதி சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான கடலோர மாவட்டங்களிலும், காவிரி டெல்டா பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: UPSC தேர்வர்களுக்கு ஜாக்பாட்! தமிழ்நாடு அரசின் ரூ.50,000 ஊக்கத்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நவம்பர் 24 முதல் நவம்பர் 25ஆம் தி வரை கடலூர், புதுச்சேரி, மயிலாடுதுறை, ரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் கடலோர மண்டலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்மாவட்டங்கள், மேற்கு உள்மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 26,27ஆம் தேதிகளில்  கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மிதமானது முதல் ஓரளவு கனமான மழையும், ஆங்காங்கே கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயம், உள் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மழைப்பொழிவு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வெள்ளத்தை ஏற்படுத்தும் மழையோ அல்லது பரவலான மிக கனமழையோ குறித்த எச்சரிக்கை அல்ல. நவம்பர் 23 முதல் 27 வரை நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; மிக கனமழை என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே இருக்கக்கூடும். காவிரி டெல்டா மற்றும் தெற்கு தமிழ்நாட்டின் சில பகுதிகளில், நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: விதிமீறல் கட்டிடங்களுக்கு இனி பூட்டு, சீல் மற்றும் இடிப்பு! தமிழ்நாடு அரசு அதிரடி சுற்றறிக்கை Explained

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இன்று (நவம்பர் 21) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.  

நவம்பர் 22ஆம் தேதி  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர தமிழகத்தை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் இதர தெற்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். நவம்பர் 23ஆம் தேதி கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Guidance TN ஊழியர்கள் பணிநீக்கம் செய்யவில்லை... அரசின் விளக்கமும்; டி.ஆர்.பி. ராஜா விமர்சனமும்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES