தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சம்பளம் அதிரடி உயர்வு.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
TN Govt Announcement: கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தொகுப்பூதிய ஆசிரியர்களின் சம்பளம் ரூ.25,000 ஆக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், தொகுப்பூதிய ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
TN Govt Announcement: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த நிலையில, நேற்று சுற்றுலா, நீர்வளத்துறை உள்ளிட்ட துறை சார்பில் விவாதம் நடந்தது. அப்போது சில அதிரடி அறிவிப்புகள் நேற்று வெளியானது. அந்த வகையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தொகுப்பூதிய ஆசிரியரின் சம்பளம் உயர்வு
கலை பண்பாட்டுத் துறையின் கீழ இயங்கும் கல்லூரிகளில் விரிவுரையாளர்/பயிற்றுநர் பணியிடங்களை மாணாக்கர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தில் நிரப்பி, மாணாக்கர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
சிறந்த கலைஞர்கள் ஆசிரியர்களாக ரூ.20000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு மாத ஊதியத்தினை ரூ.250000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளது. இதற்காக தொடர்ந்து கூடுதல் செலவினமாக ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா, பண்பாடு துறையின் அறிவிப்புகள்
- ரூ.50 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கலைப் பயிற்சி வழங்கப்படும்.
- தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தி வரும் இசைக்கருவிகளை முறையாக பராமரிக்க, அவற்றை பழுது நீக்க செய்திட தொடர் செலவினமாக ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- ரூ.2 கோடியில் 2 கலை ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும். கோவை, தஞ்சாவூர் ஆகிய 2 இடங்களில் கலை ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்
- தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் மூலம் ரூ.3000 மாதாந்திர நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் கூடுதலாக 1500 கலைஞர்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.
- ரூ.1.25 கோடியில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு செயற்கை நுண்ணறிவு ஏஐ பயிற்சி வழங்கப்படும்.
- ரூ.100 கோடியில் 1000 அரசுப் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர்கள் அமைக்கப்படும்.
- ரூ.15 கோடியில் 250 பள்ளிகளில் பேவர் பிளாக் நடைபாதைகள் அமைக்கப்படும்.
- மாதவிடாய் சுகாதார மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி 10000 பள்ளிகள் மற்றும் 1,000 கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
- ரூ.3.989 கோடி மதிப்பீட்டில் ஊட்டச்சத்து நிறுவனங்கள் அமைக்கப்படும்.
- ரூ.7.40 கோடியில் 74 மகளிர்ல சுய உதவிக்குழு உணவகங்கள் வழங்கப்படும்.
- ரூ.82 கோடியில் மலைப்பகுதிகளில் புதிய இணைப்புச் சாலைகள் அமைக்கப்படும். நாமக்கல், சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் சாலை இணைப்பு இல்லாத கிராமங்களுக்கு அனைத்து பருவ காலங்களில் பயன்படும் வகையில், 4 புதிய சாலைகள் அமைக்கப்படும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.