SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: வெளி மாநிலத்தவர்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுமா? முழு விவரம்

Thaimaman Thanga Mothiram Thittam: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வெளி மாநிலத்தவருக்கு பொருந்துமா என்பது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த விவரம் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 05, 2026, 04:32 PM IST | Updated: Oct 05, 2026, 04:53 PM IST
Join

Thaimaman Thanga Mothiram Thittam Explained: தமிழகத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் செப்டம்பர் 28ஆம் தேதி துவங்கி வைத்தார். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், மக்கள் மத்தியில் சில குழப்பங்கள் நீடித்து வருகிறது. அதாவது, வெளி மாநிலத்தவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தற்போது சுகாதாரத்துறை விளக்கம் அளித்து இருக்கிறது.

வெளி மாநிலத்தவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுமா?

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவர் கர்நாடக மாநிலம் மைசூரை  சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார்.  இரண்டாவது பிரசவத்திற்காக, கடந்த ஆறு மாதங்களாக காரைக்குடியில் உள்ள தாய் வீட்டில் தங்கி, முத்துப்பட்டணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்தர். கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி உமா மகேஸ்வரிக்கு  காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் உமா மகேஸ்வரியின் குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்குவதற்கான டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் சமர்ப்பித்த ஆதார் அட்டையில் முகவரி மைசூர் முகவரியை கொண்டிருக்கிறது. இதனால், கணினியில் பதிவு செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உமா மகேஸ்வரிக்கு தங்க மோதிரம் வழங்கப்படுவதில்லை. இதனால், உமா மகேஸ்வரி அதிருப்தி அடைந்தார்.

 

 

இந்த நிலையில், வெளி மாநிலத்தவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுமா என்பது  குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்து இருக்கிறது. சுதாதாரத்துறை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, "திருமதி உமா மகேஸ்வரி அவர்கள், ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டதில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவருகிறது.

மேலும் படிக்க: தாட்கோ இலவச பயிற்சி! லட்சங்களில் சம்பாதிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது?

சுகாதாரத்துறை விளக்கம்

பிரசவத்திற்காக தனது தாயாரின் இல்லத்திற்கு வந்த அவர், காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 17.09.2026 அன்று அறுவைச் சிகிச்சை (Cesarean Section) மூலம் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். திருமதி உமா மகேஸ்வரி அவர்களுக்கு அனைத்து மருத்துவச் சிகிச்சைகளும்  கட்டணமில்லாமல் வழங்கப்பட்டதுடன், பிரசவத்திற்குப் பிந்தைய காலத்திலும்  (Potnatal care) போதுமான மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டது.

29.09.2026 அன்று அவர் மருத்துவமனையிலிருந்து  விடுவிக்கப்பட்டபோது (discharge),  “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின்” கீழ் திட்டத்தின் கீழ் பயன் பெற இயலாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,  நீங்கள் சமர்ப்பிக்கப்படும் ஆதாரில் தமிழ்நாடு முகவரி இருந்தால் மட்டுமே உங்களுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் உங்கள் குழந்தை மோதிரம் வழங்கப்படும். வெளி மாநில முகவரி ஆதாரில் இடம்பெற்றிருந்தால், இத்திட்டத்தில் மோதிரம் வழங்கப்பட மாட்டாது. எனவே, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

 

தங்க மோதிரம் திட்டத்தில் தகுதியானவர்கள் யார்?

2026 ஜூன் 22 அன்று அல்லது அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும குழந்தைகளுககும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்டும். தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும். மேலும், மாநில அரசின் PICME பதிவு செய்தவராகவும் RCH அடையாள அட்டையை வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.  இத்திட்டத்திற்குத் தனித்தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை; மருத்துவமனை மூலமாகவே விவரங்கள் திரட்டப்பட்டு வழங்கப்படுகிறது. முதல் குழந்தை மட்டுமில்லாமல், இரண்டாவது, மூன்றாவது குழந்தை என அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

ஒரு கிராம் தங்க மோதிரம் எப்படி பெறுவது?

மேலும் படிக்க: பருப்பு கொள்முதல் விலையை குறைத்ததா தவெக அரசு? திமுக சுடச்சுட பதிலடி

தங்க மோதிரம் திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்

யாருக்கெல்லாம் மோதிரம் கிடைக்காது?

தாய்மாமன் தங்க மோதிரத்தில் திட்டத்தில் ஒரு கிராம் மோதிரம் தனியார் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படாது. ஆதாரில் வெளி மாநில முகவரிக்கும்  இருக்கும், வெளி மாநிலத்தவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படாது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு வரும் பெண்களின் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அரசுக்கு ஏற்படும் செலவு எவ்வளவு?

இந்த ஆண்டு ஜூன் 23 அன்று மாநில அரசு பிறப்பித்த உத்தரவின்படி , இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தது. ஆண்டுக்கு 4,41,667 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

தமிழகத்தில் ஒரு வருடத்தில் எத்தனை பிரசவங்கள்?

தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6-இன் படி, ஆண்டுக்கு தமிழகத்தில் 7.8 லட்சம் பிரசவங்கள் பதிவாகின்றன. இதில் மொத்தம் பிரசவங்களில் சுமார் 99.9 சதவீதம் மருத்துவமனையில் நடைபெறுகின்றன. இவற்றில், அரசு சுகாதார நிலையங்களில் கிட்டத்தட்ட 4.4 லட்சம் பிரசவங்கள், அதாவது சுமார் 53% நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள அரசு சுகாதார நிலையங்களில் ஆண்டுதோறும் பதிவாகும் ஏறத்தாழ 4.4 லட்சம் பிரசவங்களில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் 54%, மாவட்ட மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகள் 37%, மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் 9% ஆகும் என தரவுகளில் சொல்லப்பட்டுள்ளது.   

மேலும் படிக்க: தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES