SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

CM விஜய்க்கு பாதுகாப்பு பணி.. பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட எஸ்ஐ.. அதிர்ச்சி சம்பவம்!

Tirunelveli Crime News: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவலர் அளித்த புகாரில் சிறப்பு எஸ்.ஐ. குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Nov 05, 2026, 01:22 PM IST | Updated: Nov 05, 2026, 01:51 PM IST
Join

Tirunelveli Crime News: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பெண்கள், சிறுமிகள் தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும், கொலை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இதனை தடுக்க,  தமிழக அரசும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இருந்தாலும், தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், பெண் காவலருக்கே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

முதல்வர் விஜய்யின் நிகழ்ச்சி

கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிக்கோவில் பிரிவு அருகே உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண திருமண மண்டபத்தில் அரசு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வருகை தந்தார் அங்கிருந்து பெந்துறைக்கு சாலை மார்க்கமாக வந்தார். 

இதனை தொடர்ந்து, பெருந்துறை சென்ற முதல்வர் விஜய், சில நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். அப்போது, அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பாதுபாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு தான் பாலியல் தொல்லையை சிறப்பு எஸ்ஐ கொடுத்துள்ளார். முதல்வர் நிகழ்ச்சியை முடித்து விட்டு வேனில் நெல்லைக்கு திரும்பும் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அகவிலைப்படி 7% உயர்வு: தீபாவளிக்கு முன் தமிழக ஓய்வூதியர்களுக்கு அரசின் சூப்பர் பரிசு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை

திருநெல்வேலி மாவட்டத்தை அடுத்த தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் குமார்(வயது 49). இவர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் ஈரோடு பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பாதுகாப்பு பணிக்காக நெல்லை மாநகர பகுதியில் இருந்து சென்ற ஆண் மற்றும் பெண் போலீசாருடன் இணைந்து சென்றுள்ளார். தொடர்ந்து அன்றைய தினம் இரவில் அவர்கள் போலீஸ் வேனில் மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் குமார் அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்னால் இருந்த இருக்கையில் பெண் காவலர் ஒருவர் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் காவலரை குமார் பாலியல் சீண்டல் செய்ததாகவும், தனது காலை வைத்து அந்த பெண் காவலரின் காலில் தடவி தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவலர் நெல்லை வந்து சேர்ந்ததும், மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அதிகாலை 6 மணிக்கு தியேட்டர் வர சொல்வது தான் மாற்றமா...? சீமான் கிடுக்குப்பிடி கேள்வி

எஸ்ஐ மீது வழக்குப்பதிவு

தொடர்ந்து அவரது அறிவுறுத்தலின்பேரில் பெண் காவலர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பாலியல் சீண்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் குமாரை கைது செய்தனர். கைதான குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றபோது இதேபோல் மற்றொரு பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதன்பின்னர் அந்த சம்பவம் மூடி மறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில, நீதிமன்றம் சிறப்பு சார்பு ஆய்வாளர் இன்னேஸ் குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, குமாரை ஜாமீனில் விடுவிடுத்த நீதிபதி, துறை ரீதியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். 

காவல் ஆய்வாளர் குமாருக்கு நரம்பு சுருள் நோய் இருப்பதாகவும், காலை நீட்டிய போது தெரியாமல் பெண் காவலரின் காலில் பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் அவர் கூறியுள்ளார். மருத்துவ பிரச்னை காரணமாகவே அவ்வாறு நடந்ததாகவும், வேண்டுமென்றே செய்யவில்லை என்வும் கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து, அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

மேலும் படிக்க: ரேஷன், ஆதார் கார்டு தேவையில்ல! ரூ.100க்கு 10 காய்கறிகள்.. எங்கெல்லாம் கிடைக்கும்?
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES