SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திருப்பூர் : டிஎன்பிஎஸ்சி மாதிரித் தேர்வுகளுடன் இலவச பயிற்சி - முன்பதிவு செய்வது எப்படி?

Tiruppur TNPSC Free Coaching : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Aug 22, 2026, 06:37 PM IST | Updated: Aug 22, 2026, 06:38 PM IST
Join

Tiruppur TNPSC Free Coaching : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பின்படி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-II போன்ற தொகுதி II (Group II) பணிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவியாளர் போன்ற தொகுதி IIA (Group IIA) பணிகளுக்கும் முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் விரிவான தேர்வு நடைமுறைகள் டிஎன்பிஎஸ்சி வழிகாட்டுதலின்படி அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள முதல்நிலைத் தேர்விற்கு (Preliminary Exam) விண்ணப்பதாரர்கள் தயாராகும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்புப் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மையத்தில் TNPSC - Group II & IIA தேர்வுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் வரும் 27.08.2026 அன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கப்படவுள்ளன.

பயிற்சி வகுப்பின் முக்கிய அம்சங்கள் மற்றும் மாதிரித் தேர்வுகள்:

இப்பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக நடைபெறும். தேர்வர்கள் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக்கொள்ளும் நோக்கில், இப்பயிற்சி காலத்தில் மாதம் இருமுறை பிரத்யேக மாதிரித் தேர்வுகளும் (Mock Tests) நடத்தப்பட உள்ளன.

முன்பதிவு மற்றும் தொடர்பு விவரங்கள்:

இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களது பெயரைத் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 0421-2999152, 9499055944 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டோ முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தகுதியுடைய தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் இணைந்து பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே சென்னை, திருவாரூர், திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களிலும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES