அப்பாவை காணோம்... CM விஜய் குறித்து சர்ச்சை பேச்சு - நயினாருக்கு குவியும் கண்டனம்
Nainar Nagendran Controversy: முதலமைச்சர் விஜய் குறித்தும், அவரது தாயார் குறித்தும் அநாகரீகமான முறையில் நயினார் நாகேந்திரன் பேசியதாக சர்ச்சை வெடித்துள்ளது. அமைச்சர் அருண்ராஜ் உள்ளிட்டோர் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Nainar Nagendran Controversy: தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் 'ஒரே நாடு' மாத இதழ் மற்றும் டிஜிட்டல் பதிப்பு வெளியீட்டு விழாவில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று நிகழ்ச்சி மேடையில் பேசினார்.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் சமீபத்திய சட்டப்பேரவை பேச்சை குறிப்பிட்டு பேசிய நயினார் நாகேந்திரன், முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவத்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் பேசியது என்ன?
அவரது பேச்சில், "...சட்டப்பேரவையில் அப்பாவை எங்கே, அப்பாவை எங்கே என முதல்வர் கேட்கிறார். அப்பா யார் என வீட்டிற்கு சென்று அம்மாவிடம் கேட்டால் தானே தெரியும். சட்டப்பேரவையில் அப்பாவை தேடினால், யார் என கேட்டால் எப்படி தெரியும்...?" என பேசியிருக்கிறார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதற்கு அமைச்சர் அருண்ராஜ் உள்ளிட்ட பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அமைச்சர் அருண்ராஜ் இதுகுறித்து:
இந்த மூன்று மாதங்களுக்கு எந்தளவிற்கு நல்லாட்சி கொடுத்து வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். இதுபோன்ற விமர்சனங்களுக்கு எங்களின் நடவடிக்கைகளின் மூலமாக, எங்களின் செயல்களின் மூலமாக, எங்களின் திட்டங்கள் மூலமாக பதிலளிப்பதே சிறப்பாக இருக்கும். மக்களின் கவனத்தை எப்படியாவது பெற வேண்டும் என்ற இயலாமையால் அவர் சொல்வதாகவே பார்க்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள்
இதைத் தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன், வினோத் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் குறித்து அநாகரீகமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, நயினார் நாகேந்திறன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் வர்த்தினி என்பவர் ஆன்லைன் வாயிலாக புகார் மனு அளித்துள்ளார்.

டிஜிபி அலுவலகத்தில் புகார்

கைது நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதேநேரத்தில் முதலமைச்சர் விஜய் குறித்து பொது விழாக்களில் அவதூறாகவும், சர்ச்சையாகவும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
திரிஷா - விஜய் குறித்து பேசியிருந்த நயினார்...
அப்படியிருக்க, தமிழக பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா?, கைது நடவடிக்கை எடுக்கப்படுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மன்னிப்பு கேட்ட நயினார்...
இதற்கு முன்னர், கடந்த பிப்ரவரி மாதம் விஜய் குறித்து பேசுகையில், 'திரிஷா வீட்டில் இருந்து முதலில் அவரை வெளியே வரச் சொல்லுங்கள்' என பேசியிருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையானது, பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பிறகு நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.