SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரூ.1 லட்சம் கோடி.. வாரந்தோறும் கடன் உதவி.. எப்படி பெறலாம்? கூட்டுறவுத்துறையின் ஜாக்பாட் அறிவிப்பு

TN Govt Loan Camp: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திட சிறப்பு கடன் முகாம்கள் மற்றும் மேளாக்களை வாரம்தோறும் நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, யாரெல்லாம் கடன் பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 12, 2026, 10:29 AM IST | Updated: Oct 12, 2026, 10:56 AM IST
Join

TN Govt Loan Camp: தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், மக்களுக்கு விவசாய கடன், நகைக்கடன் போன்றவற்றை தமிழக அரசு குறைந்த வட்டியில் வழங்கி வருகிறது. இதன் மூலம், எண்ணற்ற மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் எளிதாக கடன்களை பெற முடியும்.

கடன் வழங்க சிறப்பு முகாம்கள்

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்து பிரிவினருக்கும் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்க புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொழில் தொடங்கவும், விவசாய பணிகளை தடையின்றி தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கான ரூ.1,80,000 கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திடும் வகையில், வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த கூட்டுறவுத்துறையின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க; தமிழ்நாடு அரசின் காசநோய் விழிப்புணர்வு பேரணி - பொதுமக்களுக்கான முக்கிய தகவல்

எதற்கெல்லாம் கடன் வாங்கலாம்?

இதன்படி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.  இச்சிறப்பு முகாம்களில் நடுத்தர கால விவசாயக் கடன்கள், ஊரகத் தொழில் கடன்கள், வீட்டு வசதிக் கடன்கள், வீட்டு அடமானக் கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள், திருநங்கையருக்கான கடன்கள், மின் ஆட்டோ கடன்கள் மற்றும் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்குக் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் படிக்க: பிஎம் யஷஸ்வி கல்வி உதவித்தொகை - நவம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்

இக்கடன் முகாம்கள் குறித்த விவரங்கள் பொதுமக்களைச் சென்றடையும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கூட்டுறவுக் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்புக் கடன் முகாம்கள் குறித்த விவரங்களை அறிந்து உரிய ஆவணங்களுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 9884000845 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைக்கடன் பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு ஒரு கிராமிற்கு ரூ.10,000/-வரை கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அண்மையில் அறிவித்து இருந்தது.  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) தங்களது சொந்தக் கிளைகள் மூலம் வழங்கும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் (PACCS) மூலம் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கான வட்டிக்கும் இடையே பெரும் வேறுபாடு நிலவி வந்தது. 

இதனைச் சீரமைக்கும் வகையில், JL-CC PACCS-க்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCBs) விதிக்கும் வட்டி விகிதம். DCCB கிளைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நகைக் கடன் வட்டியை விடக் குறைந்தபட்சம் 1.25% குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், PACCS-ன் லாப வரம்பு (Margin) 2.25%-க்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவானது, இனி புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு தற்பொழுது புதுப்பிக்கப்படும் (Renewal) நகைக் கடன்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க; தாய்மாமன் தங்க மோதிர திட்டம் : பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES