SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு சூப்பர் செய்தி: அகவிலைப்படி 447% அதிரடி உயர்வு

TN EB pensioners DA hike : மின்வாரியத்தின் 'Ex-gratia' பயனாளிகளுக்கு ஜாக்பாட். 1986-க்கு முன் ஓய்வு பெற்ற பழைய ஊழியர்களுக்கு DA உயர்வு, நிலுவைத் தொகையும் கிடைக்கும். முழு விவரம்

Written By Karthikeyan Sekar
Published: Oct 06, 2026, 01:48 PM IST | Updated: Oct 06, 2026, 01:55 PM IST
Join

TN EB pensioners DA hike : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) பல ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்து ஓய்வுபெற்ற பழைய ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், அகவிலைப்படி (Dearness Allowance - DA) உயர்த்தப்பட்டு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  

யாருக்கு இந்த உயர்வு பொருந்தும்?

மின்வாரியத்தில் 01.07.1986-க்கு முன்னர் 'Regular Work Establishment (RWE)' முறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற, முறையான பென்ஷன் திட்டத்திற்குள் வராத ஊழியர்கள் மற்றும் சி.பி.எஃப் (CPF - Contributory Provident Fund) திட்டத்தில் இருந்த காலஞ்சென்ற ஊழியர்களின் மனைவி (விதவைகள்) மற்றும் அவர்களைச் சார்ந்த குழந்தைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.  

இவர்களுக்கு அரசு சார்பில் மாதாந்திர ஓய்வூதியத்திற்குப் பதிலாக மாதந்தோறும் ரூ.645 'Ex-gratia' தொகையாகவும், அத்துடன் அகவிலைப்படியும் வழங்கப்பட்டு வருகிறது.  

அகவிலைப்படி எவ்வளவு உயர்ந்துள்ளது?

தமிழக அரசு தனது Ex-gratia பயனாளிகளுக்கு வழங்கிய அகவிலைப்படி உயர்வை ஏற்று, மின்வாரியமும் (TNPDCL) தனது பயனாளிகளுக்கு DA உயர்வை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கடந்த 01.01.2023 முதல் முன் தேதியிட்டுப் படிப்படியாக இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது:  

நடைமுறைக்கு வரும் தேதி    திருத்தப்பட்ட புதிய அகவிலைப்படி விகிதம்    உயர்வு சதவீதம்

01 ஜனவரி 2023 முதல் 386% (15% உயர்வு)
01 ஏப்ரல் 2023 முதல் 404% (16% உயர்வு)
01 ஜூலை 2023 முதல் 419% (15% உயர்வு)
01 ஜனவரி 2024 முதல் 435% (16% உயர்வு)
01 ஜூலை 2024 முதல் 447% (12% உயர்வு)

இதன் மூலம் மாதாந்திர எக்ஸ்-கிராசியா தொகை பெறும் மிக மூத்த பயனாளிகளுக்கு அகவிலைப்படி அதிகபட்சமாக 447% வரை உயர்த்தப்பட்டுள்ளது.  

நிலுவைத் தொகையும் உண்டு:

இந்த அகவிலைப்படி உயர்வு முன்தேதியிட்டு (01.01.2023 முதல்) அமல்படுத்தப்படுவதால், இதற்கான நிலுவைத் தொகையை (Arrears) பயனாளிகள் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் என்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அருண் ராய் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.  

நீண்ட காலமாக மிகக் குறைந்த தொகையை பெற்று வந்த மின்வாரியத்தின் மிக மூத்த முன்னாள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, இந்த கணிசமான அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES