விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்! பயிர்க்கடன் வசூலிப்பது நிறுத்தம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
TN Govt Crop Loan: கூட்டுறவு சங்கங்களில் நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், பயிர்க்கடனை வசூலித்தால் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
TN Govt Crop Loan: கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தவெக தனது வாக்குறுதிகளில் முழுமையாக விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்து இருந்தது. ஆனால், கடந்த ஜூன் மாதம் முதலமைச்சர் விஜய் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டார். அதில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 50,000 ரூபாய் வரை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பி, விவசாயிகள் போராட்டத்தை நடத்தினர்.
பயிர்க்கடன் தள்ளுபடி
அதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 27ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, பயிர்க்கடன்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கி முதல்வர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பெற்றுள்ள கடன்களுக்கு 100 சதவீதம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றுள்ள பயிர்க் கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், ரூ.1 லட்சத்திற்கு மேல் பெற்றுள்ள பயிர் கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரை தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை அடுத்து, பயிர்க்கடன் நிலுவை தொடர்பான அனைத்து வசூல் நடவடிக்கைகைளையும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், பல்வேறு இடங்களில் கடன் நிலுவைத் தொகை வசூலிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து, தமிழக அரசு பயிர்க்கடன் நிலுவை தொகை வசூலிப்பது தொடர்பாக முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: அரியலூரில் செப்டிக் டேங்க் பணியில் ஈடுபட்டிருந்த 3 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி மரணம்
தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்று நிலுவையிலுள்ள பயிர்க் கடன்கள் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அனுப்பப்பட்டு, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தவறாது கடைப்பிடிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சில விவசாயிகளிடருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையிலுள்ள தங்களது பயிர்க் கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, அனைத்து விவசாயிகளின் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்வதுயாதனில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலுவையிலுள்ள பயிர்க் கடன் வசூலிப்பது தொடர்பாக கூட்டுறவு சங்கத்திலிருந்து எவரேனும் விவசாயிகளை தொடர்புகொண்டால், தொடர்பு கொண்ட கைபேசி எண் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் விவரங்களை கூட்டுறவுத் துறையின் அதிகாரபூர்வ குறைதீர்வு எண்ணான (Official Grievance Redressal Number) 98840 00845) என்ற (WhatsApp) எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க: மின்தடை பிரச்னையா? உடனடி தீர்வுக்கு வாட்ஸ் அப்பில் சூப்பர் வசதி.. புகார் எண் அறிமுகம்