SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரூ.200க்கு 10 மளிகைப் பொருட்கள்.. ரேஷன் அட்டை இல்லாமல் வாங்க முடியுமா? முக்கிய அறிவிப்பு

TN Ration Card: கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்படும் நிலையில், ரேஷன் அட்டை இல்லாதவர்கள் வாங்கலாமா என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 31, 2026, 03:46 PM IST | Updated: Oct 31, 2026, 04:00 PM IST
Join

TN Ration Card: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நாட்களாகவே விலைவாசி உயர்வு உச்சத்தை எட்டியுள்ளது. அரிசி முதல் மளிகைப் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை வரவிருக்கும் இந்த நேரத்தில், விலைவாசி உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கு பெரும் சுமையை கொடுத்துள்ளது.

ரூ.200க்கு 10 மளிகைப் பொருட்கள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ரூ.200க்கு 10 வகையான மளிகைப் பொருட்களை அடங்கிய சிறப்பு தொகுப்பை கூட்டுறவு அங்காடிகளில் விற்பனையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் குறைவான விலையில் 10 வகையான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும். கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் 128 விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் கடலைப் பருப்பு 250 கிராம், பாசிப் பருப்பு 250 கிராம், காய்ந்த மிளகாய் 100 கிராம், மல்லி விதை 150 கிராம், பூண்டு 150 கிராம், புளி 250 கிராம், கடுகு 100 கிராம், உடைத்த உளுந்தம் பருப்பு 100 கிராம், சீரகம் 50 கிராம் மற்றும் சோம்பு 50 கிராம் என மொத்தம் 1,450 கிராம் எடையிலான 10 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இதனை மக்கள் கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

ரேஷன் அட்டை இல்லாதர்வர்கள் வாங்கலாமா?

வெளி சந்தையில் இந்த 10 மளிகைப் பொருட்கள் விலை அதிகமாக இருக்கும். தீபாவளி பண்டிகை முடியும் வரை இருப்பை பொறுத்து, மளிகைப் பொருட்கள் விநியோகம் இருக்கும். ரேஷன் கார்டு இருப்பவர்கள் மட்டுமே இந்த 10 மளிகைப் பொருட்களை வாங்க முடியும். அதாவது, கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஒருவரே இருமுறை வாங்குவதைத் தவிர்க்க ரேஷன் கார்டு கேட்க வாய்ப்புள்ளது. எனவே, கூட்டுறவு அங்காடிகளில் மளிகைப் பொருட்களை வாங்க செல்லும்போது, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு எடுத்து செல்வது சிறந்தது. இருப்பினும், ஒரு நபருக்கு ஒரு மளிகைப் பொருட்கள் என்ற அடிப்படையில் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

மேலும் படிக்க: கே.என். நேரு ஊழல் வழக்கில்... சீரியல் நடிகைக்கு தொடர்பா...? அவரே கொடுத்த விளக்கம்

அரசு விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை நிர்ணயம்

சந்தையில் நிலவும் விலைகளை விடக் குறைவான விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில், அரசு பின்வரும் பொருள்களின் விலையை நிர்ணயித்துள்ளது. புழுங்கல் பொன்னி அரிசி (சன்ன ரகம்) - கிலோ ரூ.60, துவரம் பருப்பு -கிலோ ரூ.130, உளுந்தம் பருப்பு கிலோ ரூ.140, பூண்டு - கிலோ ரூ.240, மல்லி விதை (தனியா) - கிலோ ரூ.240, காய்ந்த மிளகாய் கிலோ ரூ.330.

கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் 29.10.2026 வரை 2.30 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 11.28 மெட்ரிக் டன் புழுங்கல் பொன்னி அரிசி (சன்ன ரகம்), 2.35 மெட்ரிக் டன் உளுந்தம் பருப்பு 0.54 மெட்ரிக் டன் பூண்டு, 1.01 மெட்ரிக் டன் மல்லி விதை (தனியா) 1.24 மெட்ரிக் டன் காய்ந்த மிளகாய் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 30 முதல் மாநகராட்சிப் பகுதிகளில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களில் 6 மளிகைப் பொருட்களும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் விலையில் இருந்து மேலும் 10% விலை குறைக்கப்படுகிறது.  அதன்படி, புழுங்கல் பொன்னி அரிசி (சன்ன ரகம்) - கிலோ ரூ.54, துவரம் பருப்பு - கிலோ ரூ.117, உளுந்தம் பருப்பு கிலோ ரூ.126, பூண்டு கிலோ ரூ.216, மல்லி விதை (தனியா) கிலோ ரூ.216, காய்ந்த மிளகாய் - கிலோ ரூ.297-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு! சாதி, மத கூட்டங்களுக்கு தடை
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES