பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. டிசம்பரில் நவீன இலவச சைக்கிள்.. என்ன ஸ்பெஷல்?
TN Govt Free Bicycle Scheme: மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்தை டிசம்பர் மாதம் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனால், பள்ளி மாணவர்கள் குஷியில் உள்ளனர். மேலும், இலவச சைக்கிள் திட்ட டெண்டரிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
TN Govt Free Bicycle Scheme: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பெற்றோரின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன.
இலவச சைக்கிள் திட்டம்
மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து சிரமத்தை குறைக்கவும், மாணவர்கள் கல்வியை தடையின்றி தொடங்குவதற்கு தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மலைகிராமத்தை சேர்ந்த மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், தொலைதூரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு உதவுகிறது. இதுவரை சாதாரண கைச்கிள்கள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் தவெக அரசு அமைந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு நவீன வசதிகளோடு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானது.
மேலும் படிக்க: கல்லூரிகளில் இனி எழுத்துத் தேர்வு கிடையாது! தமிழக அரசின் அதிரடி திட்டம் Explained
5.32 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
பட்ஜெட்டின்போது, நிதியமைச்சர் மரிய வில்சன், 11, 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்களை அரசு வழங்கும் என்றும் அதற்காக ஆண்டுக்கு ரூ.277 கோடி நதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்த வகையில், 2026-27ஆம் கல்வியாண்டில் 5.32 லட்சம் மாணவர்களுக்கு நவீன சைக்கிள்கள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
நடப்பு கல்வியாண்டில் 5.32 லட்சம் சைக்கிள்களை கொள்முதல் செய் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை டெண்டர் வெளியிட்டு இருந்தது. இந்த டெண்டலில் பங்கேற்பதற்காக கடைசி நாள் செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று என அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்றுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், டெண்டர் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 13ஆம் தேதி வரை தமிழக அரசு நீடித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. டிசம்பரில் நவீன இலவச சைக்கிள்.. என்ன ஸ்பெஷல்?
டிசம்பரில் நவீன இலவச சைக்கிள்
மாணவர்களுக்கான நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்தை டிசம்பர் மாதம் தொடக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் முதல் மாணவர்கள் நவீன சைக்கிள்களில் பயணிக்க முடியும். இந்த சைக்கிள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நவீன முறையில் தயாரிக்கப்படும் இலவச சைக்கிள் வழங்கப்படாது. தற்போது தவெக அரசு வழங்கவுள்ள சைக்கிள் நவீன முறையில் வழங்க உள்ளது. முந்தையை ஆட்சியில் வழங்கப்பட்டதை விட, நவீன முறையிலும், எடை குறைவாகவும், உறுதியாகவும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.
சைக்களின் சிறப்பம்சங்கள்?
- ஏற்கனவே மாணவ, மாணவிகளுக்கு ஒரே நிறத்தில் தான் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவிகளுக்கு வெளிர் ஊதா நிறத்திலும், மாணவர்களுக்கு ராணுவ பச்சை நிறத்திலும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.
- சைக்கிளுடன் மாணவர்களுக்கு தலைக்கவசம், தண்ணீர் பாட்டில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
- இரவிலும், வெளிச்சமில்லாத நேரத்தில் தெளிவாக தெரியும் வகையில், சைக்கிள்களில் முன்பதிவு, பின்பகுதிகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் (Reflective Stickers) ஒட்டப்பட்டிருக்கும்.
- புத்தகங்கள், பைகளை சுலபமாக வைக்கும் வகையில் பெரிய கேரியர், தண்ணீர் பாட்டில் வைக்க பிரத்யேக கூடை வசதிகள் இருக்கும்.
- மேம்படுத்தப்பட்ட பிரேக் அமைக்க இந்த சைக்கள்களில் இருக்கும்.
மேலும் படிக்க: காச நோய் - தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை