அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு.. பள்ளி திறப்பு எப்போது? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
TN Half Yearly Exam Schedule: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. எனவே, வகுப்பு வாரியாக தேர்வு அட்டவணையை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்.
TN Half Yearly Exam Schedule: தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டு நடந்து வருகிறது. மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்காக தயாராகி வருகின்றனர். தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில், நேற்று (நவம்பர் 27) பள்ளிக்கல்வித்துறை அரையாண்டு தேர்வுக்கான அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது.
அரையாண்டு தேர்வு அட்டவணை
- பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, 9, 10ஆம் டிசம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது.
- 11,12ஆம் வகுப்பு மாணவர்களுககு டிசம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது.
- 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 14 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது.
- 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 14 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: 11 நாட்கள் லீவ்.. அரையாண்டு தேர்வு விடுமுறை எப்போது துவக்கம்? வெளியான முக்கிய தகவல்
11,12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை
| தேர்வு நடைபெறும் நாள் | பாடம் |
| டிசம்பர் 14 | தமிழ்மொழி தேர்வு |
| டிசம்பர் 15 | ஆங்கிலம் |
| டிசம்பர் 16 | கணினி அறிவியல், வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்
|
| டிசம்பர் 17 | இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்
|
| டிசம்பர் 18 | உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்
|
| டிசம்பர் 21 | கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், வேளாண்மை |
| டிசம்பர் 22 | வேதியில் கணக்குப்பதிவியல், புவியியல் |
| டிசம்பர் 23 | பள்ளி வேலை நாள் |
9,10ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை
| தேர்வு நடைபெறும் நாள் | பாடம் |
| டிசம்பர் 14 | தமிழ்மொழி தேர்வு |
| டிசம்பர் 15 | ஆங்கிலம் |
| டிசம்பர் 16 | விருப்ப மொழி |
| டிசம்பர் 17 | கணிதம் |
| டிசம்பர் 18 | உடற்கல்வி |
| டிசம்பர் 21 | அறிவியல் |
| டிசம்பர் 22 | சமூக அறிவியல் |
| டிசம்பர் 23 | பள்ளி வேலை நாள் |
6 முதல் 8ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை
| தேர்வு நடைபெறும் நாள் | பாடம் |
| டிசம்பர் 14 | தமிழ்மொழி தேர்வு |
| டிசம்பர் 15 | ஆங்கிலம் |
| டிசம்பர் 16 | உடற்கல்வி தேர்வு |
| டிசம்பர் 17 | கணிதம் |
| டிசம்பர் 18 | விருப்ப மொழி தேர்வு
|
| டிசம்பர் 21 | அறிவியல் |
| டிசம்பர் 22 | சமூக அறிவியல் |
| டிசம்பர் 23 | பள்ளி வேலை நாள் |
வகுப்பு வாரியான தேர்வு நேரம்
1 முதல் 3ஆம் வகுப்பு – காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெறும்.
4 மற்றும் 5ஆம் வகுப்பு – மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடைபெறும்.
6ஆம் வகுப்பு – காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெறும்.
7ஆம் வகுப்பு – மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடைபெறும்.
8ஆம் வகுப்பு – காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும்.
9ஆம் வகுப்பு – மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வு நடைபெறும்.
10ஆம் வகுப்பு – காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.
11ஆம் வகுப்பு – மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும்.
12ஆம் வகுப்பு – காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.
பள்ளி திறப்பு எப்போது?
அரையாண்டு தேர்வு முடிந்து, 2027 ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கும் அன்றே 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 3-ஆம் பருவ புத்தகங்கள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களை வழங்கி, உரிய பதிவேடுகளில் மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அரையாண்டு தேர்வு விடுமுறை சிறப்பு வகுப்புகளும நடத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.