SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே குட் நியூஸ்! குரூப் 2, குரூப் 2ஏ இலவச பயிற்சி அறிவிப்பு

TNPSC Group 2, 2A Free Coaching 2026: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2026-ம் ஆண்டு குரூப் II, IIA முதனிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சியில் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Aug 18, 2026, 03:48 PM IST | Updated: Aug 18, 2026, 03:53 PM IST
Join

TNPSC Group 2, 2A Free Coaching 2026: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2026-ம் ஆண்டு குரூப் II / IIA முதனிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கப்படவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக மத்திய / மாநில அரசுகளின் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி வகுப்புகளில் பயின்று தேர்ச்சி பெற்று மத்திய அரசின் எல்லை பாதுக்காப்பு படை, மத்திய பொதுப்பணித்துறை மற்றும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நில அளவைத்துறை, கருவூலத்துறை, நீதித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, மருத்துவத்துறை, புள்ளியியல்துறை மற்றும் காவல்துறை போன்ற துறைகளில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 இலவச பயிற்சி

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2026-ம் ஆண்டின் குரூப் II மற்றும் IIA தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான மொத்த பணிக்காலியிடங்கள் 821 ஆகும். மேலும். இதற்கான முதனிலை தேர்வு 01.11.2026 அன்று நடைபெறவுள்ளது. கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும், இத்தேர்விற்கு www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 09.09.2026 ஆகும்.

இலவச பயிற்சி வகுப்புகள் எப்போது தொடங்க உள்ளது?

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளும், மாதிரித்தேர்வுகளும் வருகின்ற 22.08.2026 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாடூர் டோல் பிளாசா அருகில், ஸ்ரீ உதயம் டவர்ஸ்-ல் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவக்கப்பட்டு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

மேற்கண்ட தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாடூர் டோல் பிளாசா அருகில், ஸ்ரீ உதயம் டவர்ஸ்-ல் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 04151 -295422 / 245246 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES