SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கணினி பட்டதாரிகளுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை

TNPSC Group 4 new update : TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி. கணினி பட்டதாரிகளுக்கு இனி 'Office Automation' சான்றிதழ் தேவையில்லை என தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு

Written By Karthikeyan Sekar
Published: Nov 24, 2026, 10:39 IST | Updated: Nov 24, 2026, 10:48 IST
Image Credit: TNPSC Group 4 latest news
Join

TNPSC Group 4 new update : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (குரூப் 4) தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள கணினி பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும் வகையில், தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கணினி சார்ந்த உயர்கல்விப் பட்டம் பெற்றவர்கள் இனி தனியாக 'Certificate Course in Computer on Office Automation' சான்றிதழைப் பெற வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | இலவச மென்பொருள் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

புதிய பின்னிணைப்பு விவரம்

கடந்த 06.10.2026 அன்று வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கையில், தற்போது புதிய திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய அறிவிப்பின்படி, பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அல்லது அதற்கு இணையான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் இளங்கலை/முதுகலை பட்டம் அல்லது பட்டயப்படிப்பு முடித்த தேர்வர்களுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது:  

கணினி அறிவியல், கணினிப் பொறியியல், கணினிப் பயன்பாட்டியல், தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் பொறியியல், கம்ப்யூட்டிங், கணினி தகவல் அமைப்பு, கணினி வடிவமைப்பு,

அதாவது, B.Sc Computer Science, BCA, B.Tech IT, B.E Computer Science, MCA, M.Sc Computer Science மற்றும் Diploma in Computer Engineering போன்ற படிப்புகளை முடித்தவர்கள், தங்களின் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ சான்றிதழையே அடிப்படைத் தகுதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் மீண்டும் தனியாக 'ஆபீஸ் ஆட்டோமேஷன்' சான்றிதழ் படிப்பைப் படித்துச் சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் இல்லை என TNPSC தெளிவுபடுத்தியுள்ளது.  

நீண்டகாலச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி

இதற்கு முந்தைய நடைமுறைகளின்படி, குரூப் 4 தேர்வில் தட்டச்சர் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பதவிகளுக்குத் தேர்வாகும் நபர்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் வழங்கப்படும் 'Computer on Office Automation' சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இதனால், கணினிப் பொறியியல் மற்றும் கணினி அறிவியலில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் கூட, மீண்டும் ஆரம்ப நிலை கணினிப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயச் சூழல் நிலவி வந்தது. தேர்வர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, தற்போது TNPSC வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அந்தச் சிக்கலுக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மற்ற நிபந்தனைகளில் மாற்றமில்லை

இந்தப் புதிய விதிவிலக்குத் தவிர, 06.10.2026 தேதியிட்ட அறிவிக்கை மற்றும் அதன் முந்தைய பின்னிணைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்து விவரங்கள், கல்வித் தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் எவ்வித மாற்றமும் இன்றித் தொடரும் என TNPSC வெளியிட்டுள்ள குறிப்பில் (Note) திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வரும் 10.01.2027 அன்று குரூப் 4 எழுத்துத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பின்போது கணினிப் பட்டதாரிகளுக்கு இந்த விலக்கு மிகப்பெரிய உதவியாகவும், கால விரயத்தைத் தவிர்ப்பதாகவும் இருக்கும் எனப் போட்டித் தேர்வர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES