SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

TNPSC குரூப் 4 அறிவிப்பு எதிரொலி: இலவசப் பயிற்சி அளிக்க பயிற்றுநர்கள் தேர்வு!

TNPSC Group 4 Free Coaching: திருவாரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பயிற்றுநர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 11, 2026, 08:55 PM IST | Updated: Oct 11, 2026, 08:59 PM IST
Join

TNPSC Group 4 Free Coaching: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகி, தேர்வர்கள் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், அரசு வேலை தேடும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் 'தன்னார்வ பயிலும் வட்டம்' மூலமாக, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.  

இப்பயிற்சி வகுப்புகளில் TNPSC, UPSC, SSC, RRB (ரயில்வே), SBI, IBPS மற்றும் இதர வங்கி மற்றும் மத்திய அரசுப் போட்டித் தேர்வுகளுக்குப் பாடங்கள் நடத்தப்படவுள்ளன. இதற்காக, போட்டித் தேர்வுகளில் முதன்மைத் தேர்வுகளை எழுதிய அனுபவமும், துறை சார்ந்த அறிவும், எளிமையாகப் புரியவைக்கும் கற்பித்தல் திறனும் கொண்ட அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைத் தேர்வு செய்ய நேர்காணல் நடைபெறுகிறது.  

நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் இடம்: வரும் 14 ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில், "மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், RVL நகர், மன்னார்குடி ரோடு, விளமல், திருவாரூர்" என்ற முகவரியில் இந்த நேர்காணல் நடைபெறும்.  

பயிற்றுநர்களுக்கான முக்கிய நிபந்தனைகள், தகுதிகள்:

நேர்காணலில் பங்கேற்கும் பயிற்றுநர்கள், தாங்கள் பாடம் நடத்த விரும்பும் தலைப்பு சார்ந்த PowerPoint Presentation தயார் செய்து, மாதிரி வகுப்பு எடுக்கும் வகையில் வர வேண்டும்.  

பயிற்சிக்குத் தேவையான Study Materials, பாடக்குறிப்புகள், வினா-விடைத் தொகுப்புகள் மற்றும் மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு வருவது அவசியம்.  

பயிற்றுநர்களைத் தேர்வு செய்யும்போது அவர்களது போட்டித்தேர்வு அனுபவம், பாட அறிவு, கற்பித்தல் திறன், மற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டும் திறன் ஆகியவை முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படும்.  

தேர்வு செய்யப்பட்டு வகுப்புகள் நடத்தும் பயிற்றுநர்களுக்கு அரசு விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு உரிய மதிப்பூதியம் வழங்கப்படும்.  

குறிப்பாக குரூப் 4 உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளுக்கு மாணவர்களை வழிநடத்த ஆர்வமும் அனுபவமும் கொண்டவர்கள் தங்களது கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்கள், PPT மற்றும் பயிற்சி கையேடுகளுடன் 14.10.2026 அன்று நேர்காணலில் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9499055915 என்ற வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES