• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /ராணுவ பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்க விருப்பமா? அரசின் முக்கிய அறிவிப்பு

ராணுவ பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்க விருப்பமா? அரசின் முக்கிய அறிவிப்பு

Rashtriya Indian Military College Admission : டேராடூன் ராணுவக் கல்லூரியில் 8 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு டிசம்பர் 6 ஆம் தேதி நடக்க உள்ளது. முழு விவரம்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 11, 2026, 09:13 PM IST|Updated: Oct 11, 2026, 09:19 PM IST
joinshare
ராணுவ பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்க விருப்பமா? அரசின் முக்கிய அறிவிப்பு
Image Credit: Rashtriya Indian Military College Admission

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ராணுவ பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்க விருப்பமா? அரசின் முக்கிய அறிவிப்பு

ராணுவ பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்க விருப்பமா? அரசின் முக்கிய அறிவிப்பு

2

TNPSC குரூப் 4 அறிவிப்பு எதிரொலி: இலவசப் பயிற்சி அளிக்க பயிற்றுநர்கள் தேர்வு!

3

விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு! பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 வரும் தேதி

4

பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் மாணவிகள்... கிராமங்களில் நிலை மோசம்.. ஷாக் ரிப்போர்ட்!

5

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் (RIMC), ஜூலை 2027 பருவத்தில் 8-ஆம் வகுப்பில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வு அறிவிப்பை சிவகங்கை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. இச்சேர்க்கையில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் 01.07.2027 அன்றைய தேதியின்படி 11 ½ வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.  

தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம்: இச்சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு வரும் 06.12.2026 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வு மொத்தம் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெறும். கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கு விரிந்துரைக்கும் வகை தேர்வாகவும், பொது அறிவுப் பாடத்திற்கு கொள்குறி வகை வினாக்களாகவும் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கான மையம் மற்றும் சரியான நேரம் ஆகியவை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.  

விண்ணப்பக் கட்டணம் மற்றும் திருத்தம்: விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப் பிரிவினருக்கு ரூ.1,000/- மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC/ST) பிரிவினருக்கு ரூ.750/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இணையவழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அதில் திருத்தங்கள் ஏதேனும் மேற்கொள்ள விரும்பினால், 09.10.2026 முதல் 11.10.2026 வரை விண்ணப்பத்தில் திருத்தங்கள் செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.   

நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு முடிவுகள்: தேர்வு எழுதும் நகர விவரக் குறிப்பு தேர்விற்கு 12 முதல் 15 நாட்களுக்கு முன்பும், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு 5 முதல் 7 நாட்களுக்கு முன்பும் தேசியத் தேர்வு முகமையின் (NTA) இணையதளத்தில் வெளியிடப்படும். இத்தேர்வின் முடிவுகள் 20.02.2027 அன்று வெளியாகும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வு தோராயமாக ஏப்ரல் 2027ல் நடத்தப்படும்; இதற்கான துல்லியமான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.  

கூடுதல் தகவல் மற்றும் இணைய முகவரி: இத்தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அறிந்து கொள்ள https://exams.nta.nic.in/RIMCEE/ மற்றும் www.rimc.gov.in ஆகிய இணையதளங்களைப் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu