• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கடலோரம் ஒருநாள் டூர்... தமிழக அரசின் 'நச்' சுற்றுலா பிளான் - வெறும் ரூ.1000 தான்!

கடலோரம் ஒருநாள் டூர்... தமிழக அரசின் 'நச்' சுற்றுலா பிளான் - வெறும் ரூ.1000 தான்!

TTDC Coromandel Coast Tour : தமிழ் இலக்கியம், ஐரோப்பிய காலனித்துவ வரலாறு, சூழலியல் சார்ந்த அற்புத விஷயங்களை அறிந்துகொள்ளும் வகையில் கடலோர பகுதிகளில் தமிழ்நாடு அரசு ஒருநாள் சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. அதன் முழு விவரங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.

Written BySudharsan G
Published: Aug 08, 2026, 10:49 PM IST|Updated: Aug 08, 2026, 11:09 PM IST
joinshare
கடலோரம் ஒருநாள் டூர்... தமிழக அரசின் 'நச்' சுற்றுலா பிளான் - வெறும் ரூ.1000 தான்!
Image Credit: TTDC Chidambaram - Tharangambadi Tour | Image Credit : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

2

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

3

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

4

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

5

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TTDC Coromandel Coast Tour : தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையின் கீழ் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (Tamilnadu Tourism Development Corporation) இயங்குகிறது. இதன்கீழ் ஆன்மீகச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா உள்ளிட்ட பல வகையிான சுற்றுலாத் திட்டங்கள் உள்ளன.

தமிழ்நாட்டின் அழகையும், பழமையையும், கொண்டாட்டத்தையும், ஆன்மீகத்தையும், சுவாரஸ்யத்தையும் அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு பல வகையான சுற்றுலாத் திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வைத்திருக்கிறது.

சிதம்பரம் டூ தரங்கம்பாடி - ஒரு நாள் டூர்

சென்னையில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா திட்டங்களை, TTDC வைத்திருக்கிறது. அந்த வகையில், பண்டைய தமிழ் இலக்கியம், ஐரோப்பிய காலனித்துவ வரலாறு, சூழலியல் சார்ந்த அற்புத விஷயங்களை புரிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாட்டின் கடலோர ஒருநாள் சுற்றுப்பயணத்தை TTDC திட்டமிட்டுள்ளது.

TTDC திட்டமிடும் இந்த சுற்றுப்பயணத்தில், சிதம்பரத்தில் தொடங்கி அதையொட்டிய கடற்கரையோரமாக தெற்கே இந்த சுற்றுப்பயணம் செல்லும். அதன்பின் மீண்டும் மயிலாடுதுறை அல்லது சிதம்பரத்திற்கே திரும்பி வந்து சேர்கிறது. அந்த வகையில் இந்த சுற்றுப்பயணத்தின் முழு விவரத்தையும் இங்கு காணலாம்.

ஒருநாள் சுற்றுலாவின் முக்கிய இடங்கள்

முக்கிய இடங்கள்மாவட்டம்
பிச்சாவரம் போட் ஹவுஸ்சிதம்பரம்
பூம்புகார் சிலப்பதிக்கார ஆர்ட் கேலரி, அருங்காட்சியகம் மயிலாடுதுறை
தரங்கம்பாடி கோட்டைமயிலாடுதுறை

ஒருநாள் சுற்றுலாவின் முழு விவரம்

  • காலை 9 மணிக்கு சிதம்பரம் ஹோட்டல் தமிழ்நாட்டில் (HTN) இருந்து சுற்றுப்பயணம் தொடங்கும்.
  • அங்கிருந்து பிச்சாவரம் போட் ஹவுஸிற்கு செல்லலாம். காலை 9.30 மணிமுதல் பகல் 11.30 மணிவரை அங்கு பிச்சாவரம் சதுப்புநில காடு மற்றும் போட் ஹவுஸிற்கு செல்லலாம்.
  • அங்கிருந்து பகல் 11.30 மணிக்கு பூம்புகார் நோக்கி புறப்படலாம்.
  • மதியம் 12.45 மணிமுதல் மதியம் 2 மணிவரை பூம்புகார் கடற்கரை, சிலப்பதிக்கார ஆர்ட் கேலரி மற்றும் தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு செல்லலாம். அங்கு மதிய உணவை சாப்பிடலாம்.
  • மதிய உணவை முடித்துவிட்டு, மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.45 மணிக்கு தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு செல்லலாம்.
  • மதியம் 2.45 மணிமுதல் மாலை 4.30 மணிவரை டேனிஷ் கோட்டை முழுவதும் சுற்றிப் பார்க்கலாம்.
  • மாலை 4.30 மணிமுதல் மாலை 5 மணிவரை தரங்கம்பாடியில் உள்ள இந்தியாவின் பழமையான பிராடஸ்டன்ட் தேவாலயமான Zion தேவாலயத்திற்கு செல்லலாம்.
  • மாலை 5 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு செல்லலாம். அங்கு தேவையன்றால் பயணிகள் இறங்கிக்கொள்ளலாம். இரவு 7.30 மணிக்கு சிதம்பரம் ஹோட்டல் தமிழ்நாட்டுக்கு சென்றடையலாம். அத்துடன் சுற்றுலா நிறைவடைகிறது.

கிடைக்கும் வசதிகள்

TTDC இணையத்தளத்தின்படி, பேருந்து வசதி மற்றும் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும். உணவு, தங்குமிடம் குறித்து குறிப்பிடப்படவில்லை. சுற்றுலாவின் தேதிகளும் இணையதளத்தில் குறிப்பிடப்படவில்லை.

தொடர்புகொள்வது எப்படி?

எனவே, தேதி உள்ளிட்ட பிற சந்தேகங்களை TTDC தரப்பிடம் தொடர்புகொண்டு கேட்டு தெளிவாக தெரிந்துகொள்ளலாம். இணையத்தளத்தில் 1800 4253 1111 என்ற டோல் ஃப்ரீ நம்பரும், support@ttdconline.com என்ற மின்னஞ்சல் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டணம் எவ்வளவு?

சிதம்பரம் - தரங்கம்பாடி ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு தலா 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 4-10 வயதானவர்களுக்கு 600 ரூபாய் கட்டணம் மற்றும் 4 வயதுக்கு குறைவானவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tour Travel