SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஆறுகளில் நுரை பொங்க..ஷாம்பு, சோப்புதான் காரணம்! தவெக அமைச்சர் சர்ச்சை பேச்சு

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தவெக அமைச்சர் ராஜீவ் குமாரிடம், ஆறுகளில் நுரை பொங்குவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்திருக்கும் பதில், சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Oct 28, 2026, 01:44 PM IST | Updated: Oct 28, 2026, 01:53 PM IST
Join

தவெக கட்சிக்கும், அந்த கட்சியின் உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவருக்கும் இந்த ஆட்சி புது அட்சிதான். அதனாலேயோ என்னவோ, ஒரு கேள்வி கேட்டால் ஏடாகூடமாக பதில் சொல்லி மாட்டிக்கொள்கின்றனர். அப்படி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் பேசியிருக்கும் விஷயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆறுகளில் நுரை பொங்குவது பற்றி கேள்வி..

சமீபத்தில் அமைச்சர் ராஜீவ், திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிபு நிலையத்தில், சாயக்கழிவுநீர் கட்டமைப்புகளை அமைச்சர் ராஜீவ் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினார்.

அப்போது, மழைக்காலங்களில் மட்டும் ஆற்றில் அதிகமாக தண்ணீர் போகும்போது அதிகளவில் நுரை பொங்குவதாகவும், மக்கள் பயன்படுத்தப்படும் சோப்பு-ஷாம்பு நிறைந்த தண்ணீர் ஆற்றில் கலக்கும் போது நுரை ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.

அதே சமயத்தில், மழையை பயன்படுத்திக்கொண்டு, சாய பட்டறைகள் மற்றும் ஜவுளி தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவுகளை சுத்திகரிக்காமல் ஆற்றில் திறந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தவெக ஆட்சியில், அதிகாரிகள் இரவு பகல் பாராமல் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஆலை மூடல் போன்ற நடவடிக்கைகள் பாயும் என்றும் பேசியிருந்தார்.

எள்ளி நகையாடும் எதிர்கட்சிகள்!

சில ஆண்டுகளுக்கு முன்பு, நதிநீர் ஆவியாவதை தடுக்க, அப்போதைய அதிமுக அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு, 2018ஆம் ஆண்டு கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தேனியின் வைகை அணையின் நீர் ஆவியாவதை தடுக்க, தண்ணீரின் மீது தெர்மாகோல் தாள்களை மிதக்கவிடும் திட்டத்தை தொடங்கினார். இது, அந்நாளில் பெரிய மீம் கண்டெண்டாக மாறியது. அதிலிருந்து அவர் பெயர் ‘தெர்மாக்கோல் செல்லூர் ராஜு’ என்றானது. இந்த திட்டத்திற்கு மட்டும் சுமார் ரு.10 லட்சம் ஒதுக்கியதாக கூறப்படுகிறது. அப்படி மிதக்க விடப்பட்ட தெர்மாக்கோகள் சில நிமிடங்களிலேயே காற்றில் அடித்து கரையோரமாக அடித்து செல்லப்பட்டதும் பேசுபொருளானது.

மேலும் படிக்க | ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்? சங்கத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு?

இப்படி, தமிழ்நாடே பார்த்து கொக்கறக்கொட்டி சிறித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவே, தற்போதைய தவெக அமைச்சர் ராஜிவ்வை பார்த்து “அதெப்படிங்க குளிக்கிற சோப்பு-ஷாம்பு நுரையெல்லாம் தண்ணீரில் கலக்கும்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அவர் மட்டுமல்ல, திமுகவின் பல்வேறு பிரமுகர்களும் இதற்கு நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

அமைச்சரின் இந்த பேச்சுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் விடுத்துள்ளர். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஆறுகளில் நுரை பொங்குவதற்கு  சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும், திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில்  நுரை பெருக்கெடுப்பதற்கு  சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர்  மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர்  தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ள அவர்,  ”தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.  இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு  சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து  ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | PM Kisan Update : தமிழக விவசாயிகள் விவசாய அடையாள எண் பெறுவது எப்படி? முக்கிய அப்டேட் Explained

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES