SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரூ.15 லட்சம் வரை கடன்... ரூ.3.75 லட்சம் அரசு மானியம்! படித்த இளைஞர்களுக்கு குட் நியூஸ்

Tamil Nadu Government UYEGP Scheme Announcement : படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழ்நாடு அரசின் UYEGP மானிய கடன் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியர் அருணா முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Sep 29, 2026, 06:33 IST | Updated: Sep 29, 2026, 06:41 IST
Image Credit: Tamil Nadu Government Business Loan
Join

Tamil Nadu Government UYEGP Scheme Announcement : தமிழ்நாட்டில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களது சொந்த காலில் நின்று தொழில்முனைவோராக உருவெடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக செயல்படுத்தப்படும் ‘படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’ (UYEGP - Unemployed Youth Employment Generation Programme) கீழ், வியாபாரம் மற்றும் உற்பத்தி சார்ந்த புதிய தொழில்களைத் தொடங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடன் – 25% அரசு மானியம்:

இத்திட்டத்தின் கீழ் புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்க விரும்பும் தகுதியான பயனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடன் உதவி வழங்கப்படுகிறது. தொழில் திட்ட மதிப்பீட்டில் 95 சதவீதம் வரை வங்கிக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்; மீதமுள்ள 5 சதவீதத் தொகையை விண்ணப்பதாரர் தனது சொந்த முதலீடாக செலுத்த வேண்டும்.

மேலும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக, மொத்த திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை தமிழ்நாடு அரசு நேரடி மானியமாக வழங்குகிறது. இச்சலுகை சுயதொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்குப் பெரும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு விவரங்கள்:

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர்: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சிறப்புப் பிரிவினர்: பெண்கள், ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 55 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேவையான முக்கிய ஆவணங்கள்:

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தொழில் ஆர்வலர்கள் பின்வரும் ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்:

கல்வித் தகுதிச் சான்றிதழ் (குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி), பான் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தொடங்கவிருக்கும் தொழில் குறித்த திட்ட அறிக்கை, இயந்திரங்கள்/தளவாடங்கள் வாங்குவதற்கான விலைப்புள்ளி பட்டியல்

விண்ணப்பிக்கும் முறை மற்றும் சமர்ப்பிக்கும் முகவரி:

தகுதியும் ஆர்வமும் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.msmeonline.tn.gov.in/uyegp வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் 2 நகல்கள் மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அசல் ஆவணங்களின் நகல்களையும் இணைத்து, பின்வரும் முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்: பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம் (DIC), மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை – 622 005.

தொடர்பு எண்கள், கூடுதல் விவரங்கள்: இத்திட்டம் தொடர்பான சந்தேகங்கள், திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்: தொலைபேசி எண்: 04322-221794, கைப்பேசி எண்கள்: 89255 33981 / 89255 33979.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெற்று வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். மற்ற மாவட்டத்தினர் அந்தந்த மாவட்டத்த தொழில் மையத்தை தொடர்பு கொள்ளவும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES