• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /”ஸ்டாலினை எச்சரித்தும் கேட்கவில்லை..” கொளத்தூர் தோல்வி குறித்து திருமாவளவன் பரபரப்பு தகவல்!

”ஸ்டாலினை எச்சரித்தும் கேட்கவில்லை..” கொளத்தூர் தோல்வி குறித்து திருமாவளவன் பரபரப்பு தகவல்!

கொளத்தூர் தொகுதியில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், ஸ்டாலினிடம் தொகுதி மாறி போட்டியிடுமாறு எச்சரித்ததாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Written ByR Balaji
Published: Oct 15, 2026, 17:40 IST|Updated: Oct 15, 2026, 17:43 IST
joinshare
”ஸ்டாலினை எச்சரித்தும் கேட்கவில்லை..” கொளத்தூர் தோல்வி குறித்து திருமாவளவன் பரபரப்பு தகவல்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கணினி பட்டதாரிகளுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கணினி பட்டதாரிகளுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை

2

2026ல் அதிக வசூல் செய்த டாப் 6 இந்திய திரைப்படங்கள்! லிஸ்ட்ல ஒரே ஒரு தமிழ் படம்..

3

இலவச மென்பொருள் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

4

சென்னை: இந்த பகுதிகளில் நாளை (நவம்பர் 25) குடிநீர் விநியோகம் நிறுத்தம்... உங்க ஏரியாவில் தண்ணீர் வருமா?

5

8வது ஊதியக் குழு: இனி ஒவ்வொரு ஆண்டும் 6% ஊதிய உயர்வு? அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கொளத்தூர் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெருமளவில் பெயர்கள் நீக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததும், அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினிடமும், அமைச்சர் சேகர்பாபுவிடமும் தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறி உள்ளார். மேலும், கொளத்தூரில் போட்டியிட வேண்டாம் என்றும் தொகுதி மாறி போட்டியிடுமாறும் ஸ்டாலினிடம் தான் வலியுறுத்தியதாகவும், அனால் அவர் அதை ஏற்கவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் ஆணைய ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் உள்ள எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் ராஜ்மோகன், வன்னியரசு உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையான எஸ்ஐஆர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தேர்தல் அணையத்தின் செயல்பாடுகள் குறித்தும் அவர் விமர்சனங்களை தெரிவித்தார்.

கொளத்தூரில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

கொளத்தூர் தொகுதியில் எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தனக்கு தகவல் கிடைத்ததாக திருமாவளவன் கூறினார். அப்போது, தொலைபேசியில் தொடர்புகொண்ட பெண் ஒருவர், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முதலில் அந்த தகவலை பெரிதாக எடுத்துகொள்ளாத நிலையில், அந்த பெண் தொடர்ந்து தொடர்புகொண்டு இதுகுறித்து கூறியதாக திருமாவளவன் விளக்கினார். இதையடுத்து அந்த பெண்ணை சேகர்பாபுவுடன் பேச செய்ததாகவும், பின்னர் ஸ்டாலினை நேரில் சந்தித்தபோதும் இதுகுறித்து எடுத்துரைத்ததாகவும் அவர் கூறினார்.

ஸ்டாலினை தொகுதி மாறி போட்டியிட சொன்னேன்

கொளத்தூரில் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை சுட்டிக்காட்டி, வேறு தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டும் என தான் கேட்டுக்கொண்டதாக திருமாவளவன் தெரிவித்தார். ஆனால், நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் தவறாக நீக்கப்படவில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்ததாக அவர் கூறினார். சேகர்பாபுவிடமும் இதுகுறித்து பேசியபோது, முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்ற பதில் கிடைத்ததாக திருமாவளவன் குறிப்பிடார்.  

இறுதியில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியடைந்ததாகவும், தான் முன்கூட்டியே தெரிவித்த எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் அவர் தனது பேச்சில் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதாகத் திருமாவளவன் சுட்டிக்காட்டினார்.

ஞானேஷ் குமார் பதவி விலகுவது மட்டுமே போதுமானதல்ல என்றும், நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே முக்கியம் என்றும் அவர் கூறினார். சங் பரிவார் அமைப்புகளுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், இதற்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பாஜகவின் தேர்தல் வெற்றிகள் திட்டமிட்ட சதியின் விளைவு எனத் தான் கருதுவதாகவும், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டினார். தமிழகத்திலும் கேரளாவிலும் பாஜகவால் பெரிய அளவில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் பேசினார்.

தமிழகத்தில் மட்டும் 97 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறிய திருமாவளவன், கொளத்தூர் தொகுதியில் நடந்ததாகக் கூறப்படும் பெயர் நீக்கங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu