லண்டனில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், ரேஸிங் சர்க்யூட்டுக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்யை, அஜித்குமார் வரவேற்றார். அப்போது விஜய்யும், அஜித்தும் இணைந்து அங்கு திரண்டிருந்த பார்வையாளர்களை நோக்கி கை அசைத்தனர். அங்கிருந்த இருவரின் ரசிகர்களும் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.
இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தை முதலமைச்சர் விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷ் பழனிசாமி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜய்யும், அஜித்தும் பரஸ்பரம் கட்டியணைத்திருக்கும் புகைப்படத்தையும்; இருவரும் கைக்கோர்த்துக்கொண்டு பார்வையாளர்களை நோக்கி கைக்காட்டும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தின் பின்னணியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோரும் தென்படுகின்றனர்.
புகைப்படம் மட்டுமின்றி விஜய் மற்றும் அஜித் சந்தித்துக்கொண்ட வீடியோவும் வெளியாகி உள்ளது. விஜய்யை வரவேற்க அஜித்குமார் தனது குழுவினருடன் காத்திருந்தார். அப்போது அஜித்தை பார்த்தும் விஜய்யை ஸ்டைலாக ஓடிவந்து, கட்டிப்பிடித்தார். இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித்தை பார்த்ததும் ஸ்டைலாக ஓடி வந்த விஜய் - தெறி Video#CMVijay #AjithKumar #AjithKumarRacing #SilverstoneLeMans #SilverstoneRace #London #thalapathyvijay #AjithRaceLive #RacerAK #TVKVijay #VijayAjith #AjithVijay #ExclusiveLive #LondonLive #EuropeanLeMans #LeMans… pic.twitter.com/dTP6NWS9vX
— Zee Tamil News (@ZeeTamilNews) September 12, 2026
மேலும் அஜித்துடன், ரேஸிங் சர்க்யூட்டை முதலமைச்சர் விஜய் சுற்றிப் பார்த்தார். அப்போது அங்கிருந்த உதவியாளர்களை நோக்கி, தலைவரோட (அஜித்குமார்) Suit-ஐ பிடித்து நிற்பது போல் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவிக்கிறார். அங்கிருக்கும் ஒருவர், அதை உங்களுக்கு ஒன்று கொடுத்துவிடுகிறோம் என விஜய்யிடம் தெரிவிக்கிறார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
Ak Oda Photo Edukanum 😁 pic.twitter.com/Gd90DpSu49
— 𝙒𝙖𝙡𝙩𝙚𝙧 𝙒𝙝𝙞𝙩𝙚 (@SivaTvk45) September 12, 2026
தமிழ் திரைத்துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் நட்சத்திரங்களாக திகழ்ந்தவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இடையே சினிமாத்துறையில் கடும் போட்டி நிலவியது. ஒரு காலகட்டத்தில் இருவரும் திரைப்பட பாடல்களில், காட்சிகளில் மறைமுகமாக ஒருவரை ஒருவர் மறைமுகமாக விமர்சித்து வந்தாலும், காலம் செல்ல செல்ல இருவருக்கும் இடையேயான நட்பு பலமானது.
பொதுவெளிகளில் இருவரும் ஒருவருக்கொருவர் பாராட்டிக்கொள்ளும் நிகழ்வும் நடந்துள்ளது. இத்தனை காலமும் இருவரின் ரசிகர்கள் தொடர்ச்சியாக முரண்பட்டு நின்றாலும் தற்போது விஜய் - அஜித் நேரடியாக கைக்கோர்த்திருப்பது இரு தரப்பினருக்கும் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
திரைத்துறையை தாண்டி இருவருமே தற்போது வெவ்வேறு துறைகளில் பயணித்து வருகின்றனர். முதலமைச்சராகும் முன்னரே, அரசியலுக்குள் நுழைந்ததும் இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை என விஜய் அறிவித்துவிட்ட நிலையில், அஜித் கார் ரேஸ் மற்றும் நடிப்பு இரண்டையும் கவனித்துக்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் வந்தடைந்தார். தமிழ்நாட்டில் மோட்டர் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்த நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்யும் நோக்கிலும் லண்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார். மற்ற அனைத்து பணிகளையும் நிறைவு செய்து வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அவர் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.