SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

செஞ்சி: சிறுமி காணாமல் போன முன்பு நடந்தது என்ன? கடைசி வீடியோ இதுதான்!

Gingee Child Missing Case: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி காணாமல் போவதற்கு முன்பு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Written By Umabarkavi K
Published: Oct 22, 2026, 01:20 PM IST | Updated: Oct 22, 2026, 01:42 PM IST
Join

Gingee Child Missing Case: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமம் குளக்கரை தெருவில் வசித்து வரும் வடிவேலு - பவானி தம்பதியினரின் 6 வயது மகள் ஹேமலதா. கடந்த 11ஆம் தேதி இரவு தனது பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடி விட்டு வீட்டில் பெற்றோருடன் படுத்து தூங்கி கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனார்.

காணாமல் போன 6 வயது சிறுமி

இது குறித்து சிறுமியின் தாய் பவானி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிய நிலையில் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 7 தனிப்படைகளை அமைத்து 100க்கும் மேற்பட்ட போலீசார், காணாமல் போன சிறுமியை 11 வது நாளாக இன்றும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

ஆலம்பூண்டி கிராமத்தைச் சுற்றியுள்ள ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள், மலைப்பகுதிகள், கரும்பு தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் தேடியும், சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், அக்கம், பக்கத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் தீவிர விசாரணை நடத்தியும் இதுவரை மாயமான சிறுமி குறித்து எந்தவிதமான சிறு தடயமும் கிடைக்காமல் போலீசார் தொடர்ந்து திணறி வருகின்றனர்.

மேலும் படிக்க: ஹரிஷ் மரண வழக்கு: பிரபல யூ-ட்யூபர் ஜேசன் சாமுவேல் கைது - பின்னணி என்ன?

11வது நாளாக சிறுமியை தேடும் போலீஸ்

ஆலம்பூண்டி கிராமத்தைச் சுற்றிலும் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள் மற்றும் செல்போன் டவரில் பதிவான 600 நபர்களின் செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்களையும் முழுமையாக சேகரித்து அலசி ஆராய்ந்து பார்த்தும் சிறுமி மாயமானது எப்படி என்பது குறித்து போலீசாருக்கு எந்தவிதமான தடயமும் கிடைக்கவில்லை என்பதால் மாயமான சிறுமியை கண்டுபிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியின் வீடு அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள விவசாய கிணறுகளில் தீயணைப்பு வீரர்கள் இறங்கி தண்ணீரில் மூழ்கி தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போதும் எந்த தடயமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து மாயமான சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர். தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறையினர் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, குடியிருப்பாளர்களிடமிருந்து விவரங்களைச் சேகரித்து, அந்த இடங்களை முழுமையாகச் சோதித்து வருகின்றனர். ஆலம்பூண்டி மலையில் மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறையினர் தேடுதலைத் தொடர்கின்றனர். அவர்கள் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான குழு ஒன்று, அப்பெண்ணின் வீட்டில் தடயவியல் பரிசோதனைகளை நடத்தி வருகிறது.

மேலும் படிக்க: இனி வெறும் 3 மணி நேரத்தில் சென்னை டு ஹைதராபாத்: வருகிறது புல்லட் ரயில்.. பணிகள் தொடக்கம்

பிறந்தநாள் வீடியோ

 

 

இந்நிலையில் காணாமல் போவதற்கு முன்பு சிறுமி ஹேமலதா கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோ காட்சியில் அக்கம், பக்கத்து வீட்டு சிறுவர், சிறுமிகளுடன்  ஹேமலதா கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் தனது பிறந்த நாளை கொண்டாடுவது பதிவாகியுள்ளது. இப்படி சிரித்த முகத்துடன் மகிழ்ச்சி பொங்க தனது பிறந்த நாளை கொண்டாடி விட்டு தூங்க சென்ற சிறுமி ஹேமலதா, அதன்பிறகு இதுநாள் வரை காணவில்லை என்பது  அனைவரின் மனதையும் கலங்க செய்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற திட்டமிட்டு வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எது எப்படியோ சிறுமி விரைவாக நலமுடம் வீடு திரும்பினால் போதும் என ஒட்டுமொத்த தமிழகமே வேண்டி வருகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தை நோக்கி வரும் ’முரசு' புயல்? அடுத்த 3 நாட்களுக்கு உஷார்! கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES