SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கைது... டிச.11 வரை சிறை - கவனம் பெறும் POSH சட்டம் என்றால் என்ன? Explained

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதான வழக்கில் கவனம் பெற்றுள்ள POSH சட்டம் என்றால் என்ன? புகார் அளிக்கும் முறை, கால அவகாசம், ICC விசாரணைக்கும் காவல்துறை விசாரணைக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் குறித்து இங்கு காணலாம்.

Written By Sudharsan G
Published: Nov 28, 2026, 12:31 IST | Updated: Nov 28, 2026, 12:54 IST
Image Credit: AI Generated Image : ChatGPT
Join

POSH ACT 2013 Explained: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது, டிசம்பர் 11ஆம் தேதிவரை அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

இந்தச் சம்பவத்தில் POSH சட்டம் எனப்படும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் இங்கு ஒரு முக்கியமான சட்ட நுணுக்கம் இருக்கிறது. POSH சட்டத்தின் கீழ் நடைபெறும் விசாரணையும், காவல்துறை மேற்கொள்ளும் குற்றவியல் விசாரணையும் தனித்தனியானவை என்பதும் கவனிக்க வேண்டும்.

POSH சட்டம் என்றால் என்ன...? இச்சட்டத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தலுக்கான வரையறைகள் என்ன...?, இந்த சட்டத்தின்படி புகார் அளிப்பது எப்படி...? POSH விசாரணைக்கும் என்ன வித்தியாசம்...? ஆகியவற்றை இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

1. POSH சட்டம் என்றால் என்ன?

POSH என்பதன் விரிவாக்கம்: Prevention of Sexual Harassment of Women at Workplace (பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டம்)

எப்போது கொண்டுவரப்பட்டது: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது, புகார்களை விசாரித்து உரிய நிவாரணம் வழங்குவது ஆகியவற்றுக்கான கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமாகும்.

POSH சட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

2. எதெல்லாம் பாலியல் துன்புறுத்தலாகக் கருதப்படும்?

POSH சட்டம் பாலியல் துன்புறத்தலுக்கான வரையறையை வழங்கி உள்ளது. அதில் முக்கியமானதாக:

மேலும் இத்தகைய செயல்கள் தொடர்பான சூழ்நிலைகளும் சட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படலாம்.

3. POSH சட்டத்தின்படி புகார் அளிப்பது எப்படி?

இந்தச் சட்டத்தின் கீழ் இரண்டு வகையான புகார் குழுக்கள் உள்ளன.

உள்ளக புகார் குழு (ICC)

லோக்கல் கமிட்டி

10க்கும் குறைவான ஊழியர்கள் உள்ள பணியிடங்கள் அல்லது ICC அமைக்கப்படாத சூழல்களில் மாவட்ட அளவிலான லோக்கல் கமிட்டியிடம் புகார் அளிக்கலாம்.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றத்தில் தீபம்: தவெக அரசு செய்ய வேண்டியது இதுதான் - வழக்கறிஞர் வலியுறுத்தல்

4. புகார் அளிக்க கால அவகாசம் எவ்வளவு?

5. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான புகார் என்ன?

பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது புகார் அளித்துள்ளார்.

புகாரில் இடம்பெற்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள்:

இவை அனைத்தும் புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே. இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. அருள் விக்னேஷ் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

6. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கும்... POSH சட்டமும்...

இந்த வழக்கில் அமைக்கப்பட்ட ICC

7. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்ட சட்டப்பிரிவுகள்

அருள் விக்னேஷ் POSH சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்வில்லை. காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது BNS மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ்,

BNS 75 பாலியல் துன்புறுத்தல்
BNS 78 பின்தொடர்தல்
BNS 79பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கிலான வார்த்தை அல்லது செயல்
BNS 132அரசு ஊழியர் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் அல்லது தாக்குதல்
தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், பிரிவு 4பெண்களைத் துன்புறுத்தல் தொடர்பான குற்றம்

8. POSH விசாரணைக்கும், காவல்துறை விசாரணைக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டு விசாரணைகளும் ஒரே நேரத்தில் நடைபெறலாம். ஆனால் அவற்றின் நோக்கங்கள் வேறுபட்டவை.

அம்சம்      POSH விசாரணைகாவல்துறை விசாரணை
நோக்கம்   பணியிடப் பாலியல் துன்புறுத்தலை விசாரித்தல்குற்றவியல் குற்றத்தை விசாரித்தல்
விசாரணை அமைப்புICC/லோக்கல் கமிட்டிகாவல்துறை
சட்டம்  POSH சட்டம் 2013  BNS உள்ளிட்ட குற்றவியல் சட்டங்கள்
நடவடிக்கை  பணியிட நடவடிக்கை, சேவை விதிகளின்படி தண்டனை, இழப்பீடு பரிந்துரைகைது, குற்றப்பத்திரிகை, நீதிமன்ற விசாரணை
முடிவு  குழுவின் விசாரணை அறிக்கை   நீதிமன்றத்தின் தீர்ப்பு

POSH சட்டத்தின் பிரிவு 28-இன்படி, இந்த சட்டம் மற்ற சட்டங்களின் செயல்பாட்டைத் தடுக்காது. எனவே, POSH விசாரணையும் குற்றவியல் விசாரணையும் தனித்தனியாகத் தொடர் முடியும்.

முடிவு: இந்த வழக்கு ஏன் முக்கியமானது?

மேலும் படிக்க | காங்கிரஸ் பல்டி.. தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு.. காரணத்தை விளக்கிய ஸ்டாலின்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES