• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /குறையும் சுகப்பிரசவம்.. 6ல் 10 பெண்களுக்கு சிசேரியன்.. காரணங்களை அடுக்கும் மருத்துவர்! Explained

குறையும் சுகப்பிரசவம்.. 6ல் 10 பெண்களுக்கு சிசேரியன்.. காரணங்களை அடுக்கும் மருத்துவர்! Explained

இந்தியாவில் பிரசவத்தின்போது சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது அதிகரித்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் 10 பெண்களில் 6 பேர் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதாக தெரியவந்துள்ளது. ஏன் சிசேரியன் அதிகரிக்கிறது? என்ன காரணம்? என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Nov 16, 2026, 15:07 IST|Updated: Nov 16, 2026, 15:28 IST
joinshare
குறையும் சுகப்பிரசவம்.. 6ல் 10 பெண்களுக்கு சிசேரியன்.. காரணங்களை அடுக்கும் மருத்துவர்! Explained
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

பேரூராட்சி ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! கட்டாய இடமாற்றம் குறித்த புதிய விதிமுறைகள் Explained

2

Explained: பிஸ்லெரி தண்ணீரில் ஆபத்து.. கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனம்.. FSSAI ஆய்வில் அதிர்ச்சி!

3

அனிருத்-காவ்யா திருமணத்திற்கு ஆன செலவு என்ன தெரியுமா? பிரம்மாண்ட படமே எடுக்கலாம்..

4

கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

5

சென்னைக்கு அலர்ட்! இன்று முதல் விடாமல் கொட்டப்போகும் கனமழை.. வெதர்மேன் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நாட்டில் தற்போது நிலவும் விலைவாசி உயர்வு, தனிப்பட்ட பிரச்னை, கணவன் மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடு என பல காரணங்களால் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வருவதாக ஆய்வுகளில் வெளியாகி வருகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும், குழந்தை பிறப்பு என்பது  இப்போது பெரிய தொழிலாக மாறிவிட்டது. அனைத்து இடங்களிலும் பல கருத்தரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு லட்சக்கணக்கில் மக்கள் பணத்தை செலுத்துகின்றனர். கருத்தரிப்பிலேயே மிகப் பெரிய பணப்புழக்கம் இருக்கும் நிலையில், சமீப காலமாக சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம்  குழந்தை பெற்றுக் கொள்வது அதிகரித்துள்ளதாம்.

சிசேரியன் அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் தனியார் மருத்துவமனையில் பிரசவிக்கும் ஒவ்வொரு 10 பெண்களில் கிட்டதட்ட ஆறு பேருக்கு சிசேரியன் செய்யப்படுவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில்  சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுப்பது அதிகரித்து இருப்பதகா ஆய்வில் தெரியவந்துள்ளது. 2026-27 ஆம் ஆண்டுக்கான சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS) தரவுகளின்படி, செப்டம்பர் 2026 வரை, மகாராஷ்டிராவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற 3,23,245 பிரசவங்களில் 1,18,036 (37%) சிசேரியன் முறையில் பிரசவங்கள் நடந்துள்ளதாக பதிவாகி உள்ளது. தனியார் மருத்துவமனைகளில், 3,18,683 பிரசவங்களில் 1,89,152 பிரசவங்கள் சிசேரியன் முறையில் நடந்துள்ளது.  இதன் மூலம் மகாரஷ்டிராவில் 59 பிரசவங்கள் சிசேரியன் மூலம் நடந்துள்ளதை காட்டுகிறது.

சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து இருப்பது இப்போது இல்லை. கடந்த காலங்களில் சிசேரியன் அதிகரித்து இருக்கிறது.  சுகாதார சேவைகளின் கூடுதல் இயக்குநரால் நவம்பர் 3 அன்று வெளியிடப்பட்ட தகவலின்படி, அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை NFHS-4 (2015-16) திட்டத்தில் 18.3 சதவீதத்திலிருந்து NFHS-6 (2023-24) திட்டத்தில் 23.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 39.1 சதவீதத்தில் இருந்து 48.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: Bilkis Bano Verdict | பில்கிஸ் பானு வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு ஜாமீன் -உச்ச நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு

மும்பையில் , அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற 25,002 பிரசவங்களில் 12,654 (51%) சிசேரியன் மூலம் நடந்துள்ளன. தனியார் மருத்துவமனைகளில், 24,740 பிரசவங்களில் இந்த எண்ணிக்கை 14,606 (59 சதவீதமாக) உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள மாநகராட்சிகள் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் 50 சதவீதமாகவும், தனியார் மருத்துவமனைகளில் 64 சதவீதமாகவும் இருந்தன என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் 2015-2016ம் ஆண்டுகளில் 34.1 சதவீதமாக இருந்த சிசேரியின் விகிதம் 2019 -21ஆம் ஆண்டில் 44.9 சதவீதமாகவும், 2023-24ஆம் ஆண்டில் 46.9 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில தனியார் மருத்துவமனைகளில் சிசேரின் அதிகமாக பதிவாகி உள்ளதாக தகவல். தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 64 சதவீதமும் அரசு மருத்துவமனைகளில் 39 சதவீதமும் சிசேரியன் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் சிசேரியன் விகிதம் 10 முதல் 15 சதவீதம் தான். ஆனால், தமிழகத்தில் சிசேரியன் விகிதம் என்பது பல மடங்கு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளைவிட சுமார் மூன்று மடங்கு அதிகமாக சிசேரியன் செய்யப்படுவதாக ஐஐடி மெட்ராஸ் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: 463 கிலோ மீட்டருக்கு பிரேக் பிடிக்கமல் சென்ற வந்தே பாரத் ரயில்! யாருக்கும் ஆபத்து இல்லையே..?

சிசேரியன் அதிகரிப்புக்கு காரணம் என்ன?

சிசேரியன் அதிகரிப்பு குறித்து மருத்துவர் துஷார் பால்வே  முக்கியக் காரணங்களை விளக்கியுள்ளார். அவர் கூறுகையில், "வயதான பிறகு கருத்தரிப்பது, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு மற்றும் நீர்க்கட்டி பிரச்சனை போன்ற உடல்நலப் பிரச்சனைகள் கர்ப்பத்தைச் சிக்கலாக்கி பிரசவ முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

மேலும், ஐ.வி.எஃப் (IVF) மூலம் உண்டாகும் கர்ப்பம், குழந்தையின் எடை குறித்த கவலைகள், தாய்யின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலை, பனிக்குட நீர் குறைவு மற்றும் ஏற்கனவே சிசேரியன் செய்திருத்தல் போன்றவையும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்ய வழிவகுக்கின்றன" என தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், மருத்துவமனையின் நடைமுறைகள், பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் நோயாளிகளின் விருப்பங்களும் சிசேரியன் அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. இயல்பான பிரசவத்திற்கு (Normal delivery) 12 முதல் 18 மணிநேரம் வரை ஆகலாம். ஆனால், சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பொதுவாக 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பதால், இதனை திட்டமிடுவது எளிதாகிறது.   

பிரசவ வலியைப் பற்றிய பயம், குடும்பத்தினரின் அழுத்தம், நல்ல தேதி அல்லது முகூர்த்தத்தைத் தேர்ந்தெடுப்பது, மற்றும் கூகுள் மற்றும் சமூக வலைத்தளங்களில் உள்ள தகவல்களால் ஏற்படும் பயம் மற்றும் பதட்டம் போன்றவையும் சிசேரிய செய்வதற்கான முடிவுகளை எடுக்க தூண்டுகின்றன. உடற்பயிற்சியின்மை, உடல் எடை அதிகரிப்பு, மன அழுத்தம் மற்றும் முறையற்ற தூக்கம் போன்றவையும் சிசேரியன் அதிகரிக்க முக்கிய காரணங்களாக இருக்கும்.

மருத்துவ சிக்கல்கள்

மருத்துவச் சிக்கல்கள் ஏற்படும் போது சிசேரியன் உயிரைக் காப்பாற்ற உதவுகிறது. இது தாய்,சேய் உயிரை காப்பாற்றினாலும், இது  மிகப்பெரிய அறுவை சிகிச்சையாகும். இதனால் தொற்றுநோய்கள், அதிகப்படியான ரத்தப்போக்கு, நீண்ட மீட்புக் காலம்மற்றும் பிற்காலக் கர்ப்பங்களில் சிக்கல்கள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.   இதனால், இதில் மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபரேஷன்... இந்தியாவில் முதல்முறை - இது எப்படி சாத்தியம்? Explained
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer