காங்கிரஸ் பல்டி.. தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு.. காரணத்தை விளக்கிய ஸ்டாலின்!
DMK On Delimitation: மத்திய பாஜக அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஏன் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
DMK On Delimitation: நவம்பர் 30ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆளும் பாஜக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து, தொகுதி மறுவரையறை மசோதாவில் மத்திய அரசு சில திருத்தங்களை செய்து மசோதா நகலை நேற்று வெளியிட்டது. இந்த புதிய மசோதாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. அந்த வகையில், திமுகவும் தொகுதி மறுவரையறை புதிய மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஏன் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு ஏன்?
இதுதொடர்பாக ஸ்டாலின் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் பேசுகையில், "திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது. திமுக முன்வைத்த 2 கோரிக்கைகளும் தொகுதி மறுவரையறை மசோதாவில் உள்ளன. இது நமக்கு கிடைத்த வெற்றி. உணர்ச்சி வசப்படாமல் தொலைநோக்கு பார்வையுடன் தொகுதி மறுவரையறை பிரச்னைகளை நாம் அணுகியுள்ளோம்” என்றார்.
தொர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆ.ராசா எம்பி கூறுகையில், "தொகுதி மறுவரையறையில் அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் வழங்குவதகா இருந்ததால் மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கிறது. நியாயமான தொகுதி மறுவரையறை தீவிர திமுக எதையும் சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இல்லை என்பதற்காக புதிய முடிவு எடுத்ததாக சித்தரிப்பது கேவலமான செயல்" என தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழகத்திற்கு கூடுதலாக எத்தனை சீட்? நாட்டின் தலையெழுத்தை மாற்றும் தொகுதி மறுவரையறை!
திமுக விளக்கம்
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஏன் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு அளிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பின்படி, நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்போதைய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
தொகுதி மறுவரையறையின் காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தினோம். தொகுதி மறுவரையறைக்குத் தமிழ்நாடு எதிரானதாக இல்லை. ஆனால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ உரிமை ஏற்கெனவே இருக்கும் விகிதாசாரமான 7.18 விழுக்காட்டுக்குக் கீழாகக் குறையக் கூடாது என்பது உறுதியுடனும் ஆட்சியிலிருந்த நேரத்திலேயே நெஞ்சுரத்துடனும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை.
தொகுதி மறுவரையறை இன்று முக்கியக் கட்டத்தை அடைந்திருக்கிறது. ஏற்கனவே 2002-இல் அரசியல் சட்டத் திருத்தம் மூலம் வழங்கப்பட்ட "25 years freeze" முடிவுக்கு வருகிறது. அப்படி முடிவுக்கு வந்தால், நடந்து முடிந்துள்ள 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை simple majority அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டுவிடும். அப்படியொரு ஆபத்தான சூழல் ஏற்பட்டால் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அடியோடு குறையும். அதிலிருந்து தமிழ்நாட்டைக் காக்க வேண்டிய கடமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உள்ளது. ஆகவேதான் தொடக்கத்திலிருந்தே "Fair Delimitation" என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் தற்போதைய 7.18 விழுக்காடு பிரதிநிதித்துவம் எக்காரணத்தைக் கொண்டும் குறையக்கூடாது என்பதைத் திராவிட முன்னேற்றக் கழகம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி வருகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டும் இக்கூட்டம், “தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் தற்போதுள்ள 7.18 விழுக்காடு பிரதிநிதித்துவம் குறையக்கூடாது, 1971 மக்கள் தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எவ்வித மாற்றமும் செய்யப்படக்கூடாது.
எனும் தமிழ்நாட்டின் உரிமையை நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரிலும் வலியுறுத்தி, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ உரிமையை பாதுகாக்கவும், தென்மாநிலங்களின் நலனை நிலைநாட்டிடவும் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முனைப்போடு செயல்படுவார்கள் எனத் தீர்மானிக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பல்டி
மேலும், "Fair Delimitation" என்று பேசிவிட்டு, இப்போது "No Delimitation" என்று நடைமுறைக்குச் சாத்தியமற்ற பல்டி அடித்திருப்பது காங்கிரஸ் கட்சிதான் என்பது தெரியும்! பல்டி அடிப்பது காங்கிரஸ் கட்சிக்குப் பழக்க தோஷம். ஆகவே தி.மு.க.விற்குக் கொள்கை வகுப்பு எடுக்கும் நகைச்சுவையைக் காங்கிரஸ் கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நலனையும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ உரிமையையும் பாதிக்கச் செய்யும் வகையிலான முயற்சிகளுக்கு துணை போகும் துரோகத்தை கைவிட வேண்டும்” என ஸ்டாலின் விமர்சித்தார்.