SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பாட்டிலுக்கு ரூ.10 வசூல்.. டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டமும், பின்னணியும்? Explained

Tasmac Employees Strike Explained: தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. வழக்கத்திற்கு மாறாக டாஸ்மாக்கில் சாலை நெடுகிலும் கூட்டம் அலைமோதியது. டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தியதை அடுத்து, இந்த கூட்டம் ஏற்பட்டது. போராட்டத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து முழுமையாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Nov 03, 2026, 02:26 PM IST | Updated: Nov 03, 2026, 03:01 PM IST
Join

Tasmac Employees Strike Explained: தமிழகத்தில் 3000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தவெக ஆட்சி தற்போது நடந்து வரும் நிலையில், முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறது. ஆட்சிக்கு வந்த உடனே  கல்வி நிறுவனங்கள், ஆன்மிக தளங்களுக்கு அருகே உள்ள  700க்கும்  மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை அவர் மூட உத்தரவிட்டார். தொடர்ந்து, டாஸ்மாக்கில் பல்வேறு  நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் காலி மதுபானப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தினார்.

டாஸ்மாக்கில் அலைமோதும் கூட்டம்

தமிழகம் முழுவதும் நவம்பர் 1ஆம் தேதி முதல் காலி மதுபானப் பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னை, திருவள்ளூர், மதுரை, ஈரோடு, கரூர், வேலூர், கன்னியாகுமரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நவம்பர் 1 ஆம் தேதி போராட்டம் தொடங்கியது. 

இதனால், தமிழகம் முழுவதும் பல  டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், டாஸ்மாக் கடைகளில் கூட்டம்  அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து மது பிரியர்கள் மதுபானம் வாங்கி வருகின்றனர. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, அனுமதியின்றி விற்பனை நிலையங்களை மூடிவைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தமிழகம் முழுவதும் 245 டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1729 ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க: ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்! இலவச மளிகை தொகுப்பு குறித்து லேட்டஸ்ட் அப்டேட்

மாவட்டம்    கடை மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட் எண்ணிண்கை
சென்னை 169
மதுரை1
சேலம் 75

  

 

மாவட்டம்    எத்தனை டாஸ்மாக் ஊழியர்களுக்கு நோட்டீஸ்
சென்னை 341
கோவை 36
மதுரை 475
சேலம் 459

காலி மதுபானப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் என்றால் என்ன?

காலிப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டமானது, மதுப் பாட்டில்களைச் சேகரித்து முறையாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்வதையும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்துமாறு டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கான காலக்கெடுவாக மே 31ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்தது. இத்திடட்ம் செயல்படுத்தாவிட்டால் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 சுற்றுச்சூழல் இழப்பீடாக வசூலிக்குமாறு டாஸ்மாக் நிறுவனத்திற்கு உத்தரவிடக்கூடும் என நீதிமன்றம் எச்சரித்தது. இதனை அடுத்து, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நவம்பர் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.

மதுபானம் வாங்கும் நேரத்தில் தனியாக ரூ.10 தொகை வசூலிக்கப்படுவதற்கு பதிலாக, ரூ.10 பாட்டிலின் எம்ஆர்பி விலைலேயே சேர்க்கப்பட்டுள்ளது. சரிபார்ப்புக்கு உட்பட்டு, தகுதியுள்ள காலி பாட்டில்களைத் திரும்ப அளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அந்தத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். நுகர்வோர் மதுபானத்தை எங்கு வாங்கியிருந்தாலும், எந்தவொரு டாஸ்மாக் விற்பனை நிலையத்திலும் பாட்டில்களை திருப்பிக் கொடுக்கலாம். இத்திட்டத்திற்கு தான் தற்போது டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: TASMAC ஊழியர்கள் போராட்டம்: 245 பேர் சஸ்பெண்ட், 1729 பேருக்கு நோட்டீஸ்... என்ன நடக்குது?

காலி மதுபாட்டில் திட்டம் எப்படி செயல்படுகிறது?

கடந்த திமுக ஆட்சியில் காலி மதுபாட்டில் திட்டம் அமலில் இருந்தது. ஆனால், இதுவரை MRP-க்கு மேல் தனியாக வசூலிக்கப்பட்டு ரூ.10 வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் மதுபானம் விலையை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதனை தடுக்கும் நோக்கில், MRP-க்கு மேல் தனியாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.10 பாட்டில் காசு, நவம்பர் 1ஆம் தேதி முதல் MRP-யிலேயே சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு பாட்டிலின் விலையும் ரூ.10 மட்டுமே உயர்ந்துள்ளது. பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் அந்த ரூ.10 திரும்பக் கிடைக்கும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். இதனால், எந்த ஒரு மதுபானம் விலையும் உயரவில்லை.  மதுபானத்தை வாங்கி, காலி மதுபாட்டிலை கொடுத்தால், டாஸ்மாக் நிர்வாகம் ரூ.10 உங்களுக்கு திரும்பி கொடுக்கும். ரூ.10 தொகையை வசூலிப்பதிலும், திரும்ப அளிப்பதிலும் உள்ள முறைகேடுகளைச் சரிசெய்வதற்கும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்குமான நோக்கமே டாஸ்மாக் நிர்வாகம் என கூறியது.  இந்த நடைமுறை தான் நவம்பர் 1 முதல் அமலில் இருந்து வருகிறது. இது தங்களுக்கு பணி சுமையை கொடுப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேராட்டம் நடத்துகின்றனர்.

டாஸ்மாக் ஊழியர்களால் இழப்பு

தமிழக அரசின் காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்திற்கு எதிராக அரசுக்கே எதிராக டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு, அனுமதியின்றி கடைகளை மூடியதால் அரசுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் ஏன்?

காலி மதுபான பாட்டில் திரும்பி அளிக்கும் திட்டம் தங்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது என்றும் கடை ஊழியர்கள் மது விற்பனையை நிர்வகிப்பதுடன், காலி பாட்டில்களைச் சேகரித்தல், சரிபார்த்தல் மற்றும் சேமித்து வைத்தல் ஆகிய பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இது தங்களுக்கு பணிச்சுமையை கொடுப்பதாக கூறுகின்றனர்.

பணிச்சுமை: விற்பனையின்போதும், வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களைத் திருப்பிக் கொடுக்கும்போதும் ஊழியர்கள் பாட்டில்களை ஸ்கேன் செய்ய வேண்டும். பலமுறை ஸ்கேன் செய்ய வேண்டியிருப்பதால், பரிவர்த்தனைகள் அதிக நேரம் எடுப்பதாகச் சில ஊழியர்கள் கூறியுள்ளனர்.

போதுமான உபகரணங்கள் இல்லை: கூடுதல் பணியைச் சமாளிக்க, பல விற்பனை நிலையங்களில் போதுமான கையடக்க ஸ்கேனிங் கருவிகள் இல்லை எனவும் கூறுகின்றனர்.

இடவசதி இல்லை: விற்பனையாளர்கள் காலி பாட்டில்களை எடுத்துச் செல்லும் வரை, அவற்றைச் சேமித்து வைக்க பல சில்லறை விற்பனை நிலையங்களில் போதுமான இடவசதி இல்லை என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

அடிப்படை வசதிகள்: பல விற்பனை நிலையங்களில் கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படைப் பணியிட வசதிகள் இல்லாதது குறித்தும் ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கூடுதல் ரூ.10: மதுபாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கும் தொகை, தங்களுக்கே வர வேண்டும் என ஊழியர்கள் கூறுகின்றனர்.  ஆனால், அரசு அந்த 10 ரூபயை எம்ஆர்பி விலையுடன் சேர்த்தது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என கூறப்படுகிறது.

அரசு சொல்வது என்ன?

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பளம் ரூ.33,000 வரை உயர்த்தப்பட்டது. வாரத்திற்கு ஒருவாரம் விடுமுறை, மாதத்தில் 2 நாட்கள் விடுமுறை, இலவச சீருடை மற்றும் அதற்கான தைப்பதற்கான கூலியாக ரூ.6,000 கொடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக்காக ரூ.20,000 டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ காப்பீடு ரூ.1 லட்சம் என ஏகப்பட்டவை தவெக ஆட்சியில் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். 

இந்தக் கூடுதல் பணிக்காக, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள விற்பனை நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,000 வரை வழங்கப்படும். இதர மாநகராட்சிகளில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு ரூ.1,800, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ளவற்றுக்கு ரூ.1,600, மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு ரூ.1,500 என உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் படிக்க: டாஸ்மாக் முக்கிய அறிவிப்பு! FL2 லைசென்ஸ் புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES