• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தீபாவளிக்கு பட்டாசே வெடிக்காத தமிழக கிராமங்கள்! ஏன் தெரியுமா? இதோ விவரம்..

தீபாவளிக்கு பட்டாசே வெடிக்காத தமிழக கிராமங்கள்! ஏன் தெரியுமா? இதோ விவரம்..

தீபாவளி என்றாலே, பட்டாசு வெடிப்பதுதான் ஹைலைட். ஆனால், அந்த நாளிலும் தமிழ்நாட்டின் ஒரு சில கிராமத்தை சேர்ந்தவர்கள் பட்டாசே வெடிக்க மாட்டார்களாம். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 03, 2026, 03:42 PM IST|Updated: Nov 03, 2026, 04:25 PM IST
joinshare
தீபாவளிக்கு பட்டாசே வெடிக்காத தமிழக கிராமங்கள்! ஏன் தெரியுமா? இதோ விவரம்..
Image Credit: Diwali 2026 | தீபாவளி 2026

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
IND டி20 அணியில் புதிய மாற்றங்கள்? இவர்களுக்கெல்லாம் ஆபத்து! கம்பீர் திட்டம் என்ன? Explained

IND டி20 அணியில் புதிய மாற்றங்கள்? இவர்களுக்கெல்லாம் ஆபத்து! கம்பீர் திட்டம் என்ன? Explained

2

சொத்து குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு - தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

3

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? வானரப்பேட்டையில் ரத்தக் களரி

4

8வது ஊதியக் குழு: 1 ஆண்டு நிறைவு... அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட் என்ன? அமலாக்கம் எப்போது?

5

ரேசன் கடைகளில் வெங்காய விற்பனை நிறுத்தம்... கொள்முதல் ஆணை ரத்து ஏன்? - தமிழக அரசு விளக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தீபாவளி தினத்தையொட்டி, அந்த தினத்தில் பட்டாசு வெடிக்க அனைவரும் இப்போதே பட்டாசு வாங்க தொடங்கி விட்டனர். அந்த நாளில் காலையில் தலையில் எண்ணை வைத்து, தலைக்கு குளித்து, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடிப்பதும், உறவினர்களின் வீட்டிற்கு செல்வதுதான் பலருக்கும் வழக்கமாக இருக்கும். ஆனால், இங்கு தமிழ்நாட்டில் சில கிராமங்கள் வாயில்லா ஜீவன்களை கருத்திற்கொண்டு பட்டாசே வெடிப்பதில்லை. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

பட்டாசுக்கு தடை...

பண்டிகை நாட்களில் கூட, வெடி சத்தத்திற்கு தடை விதித்து, முழுமையான அமைதியை கடைப்பிடிக்கும் சில கிராமங்கள் இருக்கின்றன. அப்படி, திருவண்ணாமலையின் ஜவ்வாது மலை பகுதி மற்றும் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில்த்ஹான் தீபாவளியின்போது வெடிகள் வெடிக்கப்படாமல் இருக்கின்றன.

இதற்கு காரணம், இங்கு வாழும் வெளவால்கள்தான். இந்த கிராமங்களை சுற்றியிருக்கும் மரங்களிலும், பழைய கட்டடங்களிலும் ஆயிரக்கணக்கான வெளவால்கள் வாழ்ந்து வருகின்றன.

வெளவால்கள், இயற்கையின் சிறந்த நண்பனாகவும், மகரந்த சேர்க்கைக்கும், விதைப்பரவலுக்கும் பங்காற்றும் சுற்றுச்சூழல் காவலனாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | சமஸ்கிருத மந்திரங்களுடன் திருமணமா... துரைமுருகனை கிழித்தெடுத்த வீரமணி.. திமுகவில் சலசலப்பு

ஏன் பட்டாசுகள் வெடிக்கப்படுவதில்லை?

பொதுவாக, ஒலியின் அதிர்வுகளால் வெளவால்கள் மிகவும் அஞ்சி நடுங்கும் தன்மை கொண்டவையக இருக்கின்றன. திடீரென்று வெடிக்கப்படும் பட்டாசுகளில் இருந்து ஏற்படும் சத்தத்தால், நிலைகுலைந்து போகும் வெளவால்கள், இதனால் இறந்து போகும் அபாயம் இருப்பதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

வெளவால்களின் இந்த பயத்தினை உணர்ந்த கிராம மக்கள், அவற்றிற்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது எனும் நோக்கில் தங்களின் விருப்பங்களை ஒத்தி வைத்து விட்டு, தீபாவளி கொண்டாட்டத்தையே வேண்டாமென ஒதுக்கி வைத்துள்ளனர்.

எந்த உத்தரவும் கிடையாது..!

இது முழுக்க முழுக்க கிராம மக்களின் முடிவு என்றே கூறப்படுகிறது. இதற்கு எந்தவித அதிகாரப்பூர்வ அரசாங்க உத்தரவும் கிடையாது. மேலும், சட்ட தடைகளும் கிடையாது. நாளையே அவர்கள் நினைத்தாலும் தீபாவளி கொண்டாடலாம். ஆனால், வெள்வால்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் இதனை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரேசன் கடைகளில் வெங்காய விற்பனை நிறுத்தம்... கொள்முதல் ஆணை ரத்து ஏன்? - தமிழக அரசு விளக்கம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu