SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE: திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம்; சிறையில் தவெக எம்எல்ஏ; வானிலை அப்டேட்

Tamil News LIVE Updates: திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு, சிறையில் அடைக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ, 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ...

Written By Sudharsan G
Published: Nov 28, 2026, 09:28 IST | Updated: Nov 28, 2026, 10:02 IST
Image Credit: Thiruparankundram Deepathoon (Left), Kallakurichi TVK MLA Arul Vignesh (Right) | Image Source : X
Join

திருப்பரங்குன்றம் அப்டேட்ஸ்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் இன்றைய தினம் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முழுவதும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் உள்ளது. தீபம் ஏற்ற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மலை மேல் செல்பவர்கள் பாதுகாப்பு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

தவெக எம்எல்ஏ கைது: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணைக்கு பின்னர் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அருள் விக்னேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். டிசம்பர் 11ஆம் தேதிவரை அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.

வானிலை அப்டேட்: நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

28 Nov 2026 10:01 IST

Delimitation Bill Updates: மத்திய அமைச்சரவையில் சுப்ரியா சூலே...?

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க, சுப்ரியா சூலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி மற்றும் மகாராஷ்டிரா அமைச்சரவையில் இடம் கேட்டு சரத் பவாரின் NCP கட்சி பாஜக உடன் பேரம் நடத்தி வருவதாக தகவல். (மேலும் படிக்க)

28 Nov 2026 09:44 IST

Thiruparankundram Updates: தூணைச் சுற்றி மேடை...

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தூணைச் சுற்றி மேடை அமைக்கும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

28 Nov 2026 09:38 IST

Thiruparankundram Updates: தமிழக அரசுக்கு வழக்கறிஞர் வாஞ்சிதான் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற வலியுறுத்த வேண்டும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கருத்து (மேலும் படிக்க)

28 Nov 2026 09:37 IST

Thiruparankundram Updates: பரபரக்கும் திருப்பரங்குன்றம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை முழுவதும் CRPF கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது. தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பிரதமர் மோடியின் பதிவு, மு.க. ஸ்டாலின் விமர்சனம், இடதுசாரிகளின் பேரணி என தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. (மேலும் படிக்க)

28 Nov 2026 09:36 IST

Thiruparankundram Updates: தவெக அரசை சாடும் எடப்பாடி பழனிசாமி

ஒரு அரசை நோக்கி இவ்வளவு காட்டமான வார்த்தைகளை உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை. இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழ்நாடு சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது" என திருப்பரங்குன்ற வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை சுட்டிக்காட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசை கடுமையாக சாடி உள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES