Tamil News LIVE: திருப்பரங்குன்றத்தில் தடை; நாளை கூடுகிறது மக்களவை; வானிலை அப்டேட்ஸ்
Tamil News LIVE Updates: திருப்பரங்குன்ற மலை உச்சி பிள்ளையார் கோவில் அருகே பக்தர்கள் தீபமேற்ற அனுமதி, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் சார்ந்த அப்டேட்ஸ் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ...
திருப்பரங்குன்றம் அப்டேட்ஸ்: திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே மட்டும் பக்தர்கள் தீபமேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 4.30 மணிவரை தீபமேற்ற அனுமதி. இதனால், கல் தூணில் தீபம் ஏற்ற தடை நீடிக்கிறது.
பாஜக எம்பிக்கள் கூட்டம்: நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக்காக மக்களவை நாளை கூடும் நிலையில், டெல்லியில் இன்று பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
29 Nov 2026 11:08 IST
8th Pay Commission: 11 முக்கிய கோரிக்கைகள்
ஓய்வூதியதாரர் அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்துள்ளன. அதில், குறைந்தபட்சம் 20 சதவீத இடைக்கால ஓய்வூதிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், 2026 ஜனவரி 1-க்கு முன்னதாக ஓய்வு பெற்றவர்களை 8-வது ஊதியக் குழுவின் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது... (மேலும் படிக்க)
29 Nov 2026 10:53 IST
Parliament Session: NDA-க்கு அருகில் செல்லும் திமுக எம்.பி.க்கள்
நாளை தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக்கு முன்னதாக, மக்களவைச் செயலகம் இருக்கை அமைப்பில் மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்படி, 22 உறுப்பினர்களைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), ஆளும் தரப்புக்கு அருகில் அமரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது... (மேலும் படிக்க)
29 Nov 2026 10:47 IST
Delimitation News: தொகுதி மறுவரையால் திமுகவில் குழப்பம்
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு அளித்தது தேசிய அரசியலில் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது. இந்த முடிவிற்கு கட்சியில் உள்ள சீனியர் தலைவர்களும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது. (மேலும் படிக்க)
29 Nov 2026 10:46 IST
Delimitation Bill Updates: ஸ்டாலினை சந்திக்க வரும் இந்தியா கூட்டணி தலைவர்கள்
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை (மேலும் படிக்க)
29 Nov 2026 10:25 IST
Singappen Loan Scheme: சிங்கப்பெண் கடன் திட்டம்
பெண்கள் சுயதொழில் தொடங்க 'சிங்கப்பெண் கடன்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் அறிவித்துள்ளார். இத்திட்டம் மூலம் பெண்கள் லட்சக்கணக்கில் கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பெண் கடன் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த முழு விவரத்தையும் கூட்டுறவுத்துறை வெளியிட்டு இருக்கிறது. (மேலும் படிக்க)
29 Nov 2026 10:24 IST
Thiruparankundram News: திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற தடை
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் நேற்று (நவம்பர் 29) தீபம் ஏற்றப்பட்ட நிலையில், பக்தர்கள் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் இன்று முதல் தீபம் ஏற்றலாம் என கோயில நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர். டிசம்பர் 15-ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை மட்டுமே தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
29 Nov 2026 10:19 IST
IND vs NZ Test Updates: அஸ்வின் கிண்டல் பதிவு
நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் பேட்டிங்கின் போது, ஹெல்மட்டில் பந்து தாக்கியதால் ஆகாஷ் தீப் Concussion காரணமாக போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இதுகுறித்து ரவிசந்திரன் அஸ்வின் அவரது X பக்கத்தில் கிண்டல் பதிவு. (மேலும் படிக்க)
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.