என் மீது தொடர் தாக்குதல்... பாஜக-வுக்கு எதிராக பாயும் அண்ணாமலை
நீட் விவகாரம் முதல் CJP போராட்டம் வரை பல விவகாரங்களில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கு எதிராக அண்ணாமலை குரல் கொடுத்தது பலரை ஆச்சரியப்படுத்தியது. தன்னை பாஜக-வின் 'பி-டீம்' என கூறியவர்களுக்கு இப்போது உண்மை புரிந்திருக்கும் என அவரே தெரிவித்தார். இந்த நிலையில், அண்ணாமலை, தலைநகர் டெல்லியில் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' (CJP) நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காகத் தனக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலடியாக, மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். தனக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்... (மேலும் படிக்க)